பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பதுபோல நிற்கும்பொழுது, இடதுகையில் கடைசி இரண்டு விரல்களால் குறுந்தடியைப் பற்றியபடி மூன்று விரல்களையும் மறுபுறம் தரையில் பதித்துக்காத்திருப்பார். ஒட அனுமதிக்கும் ஒலி கிடைத்தவுடன், ஐந்து விரல் களாலும் தடியை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இரண்டாவது ஒட்டக்காரர் இருக்குமிடம் நோக்கி ஓடி வருகிறார்.


முதலாமவரின் ஓடிவரும் வேகத்தைக் கணித்து, அந்த வேகத்திற்கு ஈடு கொடுப்பதுபோல, அவர் அருகில் வரும்வரை நின்று, கவனித்து, பிறகு மெதுவாக ஒடத் தொடங்கி - அவரிடமுள்ள குறுந்தடியைப் பெறும் நிலையில் தயாராக இருப்பார். அவர் நிற்கும் நிலை யானது, வலதுகையை மட்டும் பின்புறம் வாங்குதற்கு ஏற்ப (உள்ளங் கையை) விரித்தபடி நீட்டியிருப்பார். ஒடி வருபவர் தன் இடது கையிலிருக்கும் தடியை அவர் வலக்கையில் தருவார். (படம் காண்க)