பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


உடலில் எவ்வளவு ஆற்றலும், வீரமும் இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆகவே, ஆர்வத்துடன் போட்டி களில் பங்கு பெற உங்களை அழைக்கிறேன்.


மாதவிடாய் காலங்களில் என்ன செய்வது?


மாதவிடாய் என்பது இயற்கையிலே உண்டாகும் இரத்தப்போக்கு. இதற்கு சமயச் சடங்குகள் முலாம் பூசி, பெண்களை அச்சத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கி வைத்திருக்கின்றனர். பழங்காலத்தில் பெண்கள் வீட்டுக் குள்ளே இருந்ததால், ஏற்படுத்திக் கொண்ட ஆசார முறை இது ஆனால் இன்று அன்றாடம் அலுவலகம் செல்லும் பெண்களால் அம்முறையை அனுசரிக்க முடிவதில் லையே! அதே நிலைதான் இதற்கும்.


ஆகவே, மாதவிடாய் நாட்களிலும் போட்டிகளில் பங்கு பெறலாம். ஆனால் அதற்காக ஒரு சில முறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம். போட்டி நடக்கும் நாட்களில் மாதவிடாய் ஏற்பட்டால், இரத்தப் போக்கைத் தடுப்பதற்கான தடுப்புக்கள் உள்ளன (Tampan) அவற்றைக் கொண்டு ஆவன செய்யலாம். அதற்காக அருகிலே உள்ள மருத்துவரை கலந்தாலோசிக்கலாம்.


மாதவிடாய் நாட்களை மாற்றிக் கொள்ளக் கூடிய மாத்திரைகளும் உண்டு. மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை பெறுங்கள்.


பெண்களுக்குரிய மென்மையான இடங்கள்தோள்பட்டை, மார்பகங்கள், அடிவயிறு, தோள்பின்புறம் ஆகியவையே. உடல்பாகுபாடு, உணர்ச்சி எல்லாம் உடலில் ஒடும் நீர்களாலும், சுரப்பிகளாலுமே அமைந் திருப்பதால், உடற்பயிற்சிகளால், குணங்கள் மாறுவ