பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 4. தடுத்தாடும் தந்திர முறைகள் போட்டிக்கு வருகின்ற இரு குழுக்களில் ஒன்று அடித்தாடும் குழுவாகவும், மற்றொன்று தடுத்தாடும் குழுவாகவும், பிரிந்து ஆடும். ஒரு குழு பந்தை அடித்தாடி ஒட்டம் எடுக்க முயற்சி செய்கின்ற பொழுது, மற்றொரு குழு பந்தை எறிந்தும் பந்தை பிடித்தும் எதிர்க்குழு எடுக்கின்ற முயற்சியை முறியடித்து விடுவதிலும்தான் ஆட்டம் அருமையாகக் காட்சியளிக்கிறது. அடித்தாடும் குழுவிற்குரிய திறன்கள் பந்தை அடித்தலும், அடித்த பிறகு தளம் சுற்றி ஒடலும் என்பதுடன் அடங்கிவிடுகின்றன. தடுத்தாடும் குழுவிற்கோ பந்தை எறிதல் (Pitching). அடித்து வரும் பந்தைப் பிடித்தல், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் இவற்றில் ஆட்டக்காரர்களை நிறுத்திக் காப்பாளராக்கி வைத்தல், மற்றும் ஆங்காங்கே மீதியாட்டக்காரர்களை வைத்திருத்தல் என்பன போன்ற ஆட்ட முறைகள் பலவாறு உண்டு.