பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 123


சிறப்பு நீளத் தாண்டல் மூலம் இப்பயிற்சியைப் பெறலாம். அதாவது ஒரே காலில் நிற்க வேண்டும்.இதைப் பலமுறை, தெளிவாகப் பழகிக் கொள்ள வேண்டும்.


சிறிது நாளைக்குப் பிறகு, அதாவது முதலில் கூறிய


திறன் நன்கு வந்த பிறகு, இரண்டு அல்லது இரண்டரை


அடி உயரம் வைத்து, அதேபோல் ஒரே காலால் தாண்டி


அதே காலால் மணலில் குதிக்கக் கற்றுக் கொள்வது.


பிறகு, உதைத்தெழும், இடத்தைக் குறித்துக் கொண்டு, இடத்தை நோக்கி 45 கோண அளவில் ஓடிவந்து பழகுவது. அவ்வாறு உதைத்து எழுந்ததும், மறுகால் குச்சியைக் கடக்கும்போது, உதைத்து எழுந்த கால் உடலோடு ஒட்டினாற்போல் வரவேண்டும். இடது பக்கமாகத் திரும்பி, அதே காலால் தான் குதித்து நிற்கவேண்டும்.


ஏழு காலடி ஒடி வரவேண்டும். அதற்காக முதல் மூன்றடியை சாதாரணமாகவும் (Natural Stride) அதற்குப் பிறகுள்ள நான்கு காலடியை இன்னும் அதிகமாகவும், உதைத்தெழும் இடத்தில் காலை வைக்கவும், முழுகாலைப் பதித்து மேலே எழவும் போன்ற திறன் நுணுக்கங்களை அதிகமாகப் பழகி பயிற்சி பெற்று, செழுமை பெற


வேண்டும்.


இறுதியில் ஒன்று. இருக்கின்ற உயரத்திற்கேற்ப, அதனை உணர்ந்து, சக்தி முழுதையும் அதிகமாகச் செலவழிக்காமல் தேவையான அளவே தாண்டுகின்ற திறனைக் கற்றுக் கொள்ளவும். மிக்க கவனத்தோடு மணற்பரப்பில் விழ வேண்டும். முரட்டுத்தனமாகவோ, அவசரப் பட்டு ஓடி வருவதோ, நிதானத்தை இழப்பதோ கூடாது.