பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவரா8 Volò606005uuLIII so 1930ஆம் ஆண்டில், சிகாகோ நகரைச் சேர்ந்த லியோ பிஷர் என்பவரும், பாலி என்பவரும் உள்ளரங்கத்தில் ஆடிய இந்த ஆட்டத்தை திறந்த வெளியில் ஆடி பரிசோதித்துப் பார்த்தனர். அது வெற்றிகரமாகவே அமைந்துவிட்டது. ஆகவே, உள்ளாடும் அரங்கத்தில் மட்டுமின்றி, திறந்தவெளி மைதானங்களிலும் ஆடப்பெற்றதால், இதற்கு வேறொரு பெயரும் எற்படலாயிற்று. அதாவது இதற்கு (Indoor outdoor) என்ற பெயரும் உண்டாயிற்று. புகழும் பெயரும் அமெரிக்க நாடெங்கும் இந்த ஆட்டம் வளரத் தொடங்கவே, அதன் தொடர்பாக ஆங்காங்கே மென் பந்தாட்டத்தை ஆடத் தொடங்கிய ஆட்டக்காரர்கள், தங்களுக்கு சாதகமான முறையிலே, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு விதிகளையும் ஆட்ட அமைப்பினையும் மாற்றி அமைத்துக் கொண்டு ஆடி வந்தனர். சில சமயங்களில், பல குழுக்கள் ஒன்று சேர்ந்து விளையாடியபோது, ஆளுக்கொரு விதி என்பதால், அநேகக் குழப்பங்கள் ஆட்டத்திற்கிடையிலே தோன்றவும் ஆரம்பித்தன. இதன் காரணமாக, 1908ஆம் ஆண்டு, அமெரிக்காவில் "தேசிய மென்பந்தாட்டப் பொழுது போக்காளர் சங்கம்: (National Amateur Play Ground Ball Association) ஒன்று உருவாகியது. ஒரு சீரான விதிமுறைகளே எங்கும் அமைந்திருக்க வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்பிய அந்த சங்கம், புதிய விதிகளை ஆமைத்துத் தருகின்ற பெரும்பணியில் ஈடுபட்டது. 'ாறு உருவான விதிகளை அமெரிக்கன்