பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


பிறகு, சிறிது முன்புறமாக உடல் திரும்ப, வட்டத்தின் முன்புறக் (Toe Board) கட்டையை நோக்கி இடது காலை ஊன்ற, வலதுகால் சிறிது வளையத் தொடங்குகிறது. அங்கிருந்து உடலும் இடுப்பும் கீழிருந்தவாறு நிமிரத் தொடங்கியவுடன் விரைவாக வலது கால் நடு வட்டத் திற்கு வந்தவுடன், இடதுகால் முன்புறமாக நிற்க, உடல் பின்புறமாக சிறிது வளைய, கை-இரும்புக் குண்டினைத் தள்ளும் நிலைக்கு வருகிறது.


முன்புறமாகவும், துள்ளல் வேகத்துடனும் வலது காலின் வேகமான இயக்கத்தால், உடல் முன்னுக்குவர, அப்பொழுதும் உடலின் எடை முழுதும் வலது காலிலே இருக்கும். ஆழ்ந்த மூச்சிழுத்ததின் காரணமாக மார்பு விரிய, கை முழுவேகத்துடன் முன்னே தள்ளத் தொடங்கு கிறது.


கையினால் தள்ளி எறியப்படுகின்ற குண்டு கையை விட்டு மேலே போகும்போது 45 அல்லது 50 கோணத் திலே செல்வது நல்லது. நடுவிரல்கள் மூன்றுமே குண் டினைத் தள்ளுகின்றன.


இரும்புக்குண்டைஎறிந்ததுமே, இடது கால் இருந்த இடத்தில் வலது காலும், வலது காலின் நிலைக்கு இடது காலும் எறிந்த வேகத்தால் இடம் மாறிக் கொள்ள, வலது கை வட்டத்திற்கு (Circle) அப்பால் நீண்டிருக்க, உடலின் சமநிலையை பாதுகாப்பதற்காக, இடதுகை பின்புறம் நீண்டிருக்கும்.


வலது காலை உதைத்துப் பெற்ற முழுவேகத்துடன், இடுப்பிலிருந்து எழுந்த விரைவு சக்தியுடன் வலதுகையை முழுமையும் நீட்டி இரும்புக் குண்டினை விறைப்பாகத் தள்ள வேண்டும்.