பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 143


கடின உழைப்பும், இப்போட்டியில் கலந்துகொள் வோருக்கு நிறைய தேவை. (குறைந்தது) பொதுவாக 200 பவுண்டு உடல் எடையிருந்தால் எளிதாக எறியலாம்.


எறிகின்ற முறையை விளக்கிக் கூறுங்கள்.


ஒரு பொருளைக் கையைக் குவித்து எடுப்பது போலவே, கீழே கிடக்கின்ற இரும்புக் குண்டையும் எடுக்க வேண்டும். எறிவதற்குமுன், துக்கி எறிய உதவும் கையால் வலது கையில் எறிபவர் என்றால் வலது கையால் துக்கக்கூடாது. இடது கையில் தான் எடுக்க வேண்டும்). தாக்காமல், மறு கையால் எடுத்தல் நல்லது. இடது கையால் எடுத்து, வலது கைக்கு மாற்றிக் கொள்வது நல்லது. எறிவதற்கு முன், குண்டின் எடையை வலது கைக்குக் காட்டக் கூடாது என்பர் சிலர். அவ்வாறு வலது கையால் எடுத்தாலும் தவறில்லை.


வலது கைக்கு வந்த இரும்புக் குண்டை, உள்ளங் கைக்கு மேலே வைத்து, கட்டைவிரல் ஒரு பக்கமும், மற்ற ால்கள் குண்டின் பின்புறத்தைச் சுற்றிப் பரவி இருப் துபோல பிடித்திருக்க வேண்டும். குண்டின் எடை முழுவதும், சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகிய _றிலும் பரவி இருக்க, கட்டை விரலும் சுண்டு விரலும்