பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 థ్రి மென் பந்தாட்டம் உணர்ச்சிவசப்படாத உண்மை ஊழியனாக இருக்க வேண்டும். 3. தான் எந்த இடத்தில் எறிந்தால், எதிராட்டக்காரர் அடித்தாட முடியாமல் திணறுவார், திண்டாடுவார் என்பதை யூகித்து உணர்ந்து கொண்டு, அதே இடத்தில் தொடர்ந்தாற்போல் எறிகின்ற ஆற்றல் (Ability) உள்ளவராகவும், விடாப்பிடியும் விடாமுயற்சியும் உடையவராகவும் விளங்க வேண்டும். 4. ஆற்றல் மிக்கத் திறன் நுணுக்கத்தில் கை தேர்ந்தவராக இருந்தாலும், சூழ்நிலையின் தன்மைக் கேற்ப மாறுபட்டுப் போய்விடாமல், அமைதியான மனத்தினராய் படபடப்பும் பதட்டமுமின்றி எறிகின்றதில் வல்லவராகவும் துலங்க வேண்டும். 5. எதிராட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம் என்றாலும், அந்த நோக்கத்தில் ஊறிப்போயிருக்கும் ஆவேசத்தினால் எறிவதற்கான எறிவிதி முறைகளை (Pitching Rules) எப்பொழுது மீறவே கூடாது. 6. தவறான எறிமுறை (Illegal Pitch) என்பது எதிர்க்குழுவிற்கு சாதகமாகவும், தன் குழுவிற்குத் தண்டனை வழங்கிவிடும் தண்டாயுதமாகவும் விளங்கு வதால், மிகவும் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் எறிந்திட வேண்டும். 7. எறிகின்றபோது பயன்படுத்துகின்ற கால் ஆட்சித்திறன் (Foot Work) தான் மிக முக்கியமானதாகும். அதைப்பற்றி நன்கு அறிந்தவரே எறிகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும்.