பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ဒါ့ငဲ့ - 73 அதாவது, பந்து மட்டையில் அடிபட்டுக் கிளம்பிய வுடன், அது எங்கே போய் விழும் என்பதை உணருகின்ற முன்னுணரும் நுண்ணறிவு படைத்தவ ராகவும் விளங்கிட வேண்டும். அதை உணர்ந்து அங்கே சென்று நிற்கும் பொழுதுதான், அவரது தயார் நிலையின் பெருமை உணர்ந்து கொள்ளப்படும். ஆக, அவரது ஒவ்வொரு அசைவும் ஆட்டத்திறமையின் ஆற்றலினால்தான் ஏற்படுகிறது. 8. பந்தின் திசையறியாது, ஒடும் வேகம் புரியாது தாண்டிக் குதித்து, அல்லது பார்வையாளர்கள் கண்களை உறுத்தலாம், கவர்ச்சி காட்டலாம், அது நல்ல ஆட்டத்திற்குப் பயன்படாது. பந்தை அவ்வாறு பிடிக்கும் முயற்சியில் கொஞ்சம் தவறிப்போனால் என்ன ஆகும்? பந்தைத் துரத்திக் கொண்டு ஒடிப்பிடிக்க வேண்டும். அல்லது பந்து நின்ற பிறகு தான் ஒடி எடுக்க வேண்டும். அப்படியானால், அதற்குள் அந்த ஒட்டக்காரர்கள் ஒட்டங்களை எடுத்து விட்டிருப்பார்களே! அதனால் யாருக்கு லாபம்? எதிர்க்குழுவிற்கு சாதகமாகவா ஆடுவது? இந்தக் கருத்தை உணர்ந்து ஆடிட வேண்டும். 9. தான் நின்றாடும் இடத்தில் குழப்பமில்லாமல் இருந்து ஆட வேண்டும். பந்துக்கு முன்னால் போய் விட்டால், உயரமாக வரும் பந்தைப் பிடிக்க முடியாது. அதன் போக்கறிந்து நின்று பிடிக்க வேண்டும். அத்துடன், இரண்டு பேர்களின் மத்தியில் பந்துபோனால், யார் பிடிப்பது என்ற கேள்வியுடன் நின்று விடக்கூடாது. அவர் பிடிப்பார் என்று அடுத்தவர் மேல் பாரத்தைப்