பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ oசலலையா S৫-> I I S-) சிறிது நேரம் உடலுக்கு நேர்க்கோட்டளவு அமைந் திருப்பது போல சென்றிருக்க வேண்டும். 2. எறியும் கைப்பகுதியானது இடுப்பளவுக்குக் கீழாகவே இருக்க வேண்டும். மணிக்கட்டானது முழங்கைப்பகுதிக்கு மேல் வரக் கூடாது. இந்த அமைப்புடன் தான் பந்தை எறிந்து வர வேண்டும். 3. பந்தடித்தாடுபவரை நோக்கி ஒரு காலடியை (Step) எடுத்து வைத்து எறிந்ததுமே, பந்தெறியானது முடிந்து விடுகிறது. 4. பந்தெறி நிகழ்த்தும் போது பந்தைப் பிடித்தாடுபவர் (Catcher) அவரது பந்தைப் பிடித்தாடும் பகுதிக்குள்ளே கட்டாயம் இருக்க வேண்டும். 5. பந்தைப் பிடிப்பவர், ஒவ்வொரு முறை எறிந்தப் பந்தைப் பிடித்தவுடன், பந்தெறிபவரிடம் நேராகவே எறிந்து தர வேண்டும். பந்தடித்தாடுபவர் பந்தை அடித்தாடினாலோ, உடனே பந்தை எறிந்து தர வேண்டியது அவசிய மில்லை. எறிபவரிடமிருந்து பந்து தனக்குக் கிடைத்ததும் பந்தைப் பிடித்தாடுபவர் நேராக உடனே பந்தெறி பவருக்கு அனுப்பி விட வேண்டும். பந்தைப் பெற்ற பந்தெறிபவர், அடுத்த 20 விநாடிகளுக்கு அடுத்த பந்தெறியை ஆரம்பித்துவிட வேண்டும். (ஒட்டக்காரர்கள் தளங்களில் இருக்கும் பொழுது, இந்த விதிமுறை பின்பற்றப்படத் தேவை யில்லை.)