பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 157


ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் புதிய சாதனை ஏற்படுத்தினார். தம் விரும்பிய பெண்ணை மணந்து இல்லற வாழ்விலும், விமானக் கம்பெனியில் வேலையும் பார்த்துக்கொண்டும் இருந்த ஆல்பர்ட் ஆர்ட்டர் மீண்டும் 1968ல் 212.6%” எறிந்து வெற்றி பெற்றார் என்றால் அவர் போன்ற உழைப்பு எல்லோருக்கும் தேவை.


எறியப் பழகும் வழிகள்


சுட்டு விரலால் தண்டினை மேல் நோக்கி சுற்றிவிடப் பழகுதல் சிறந்த பயிற்சி. சுற்றிவிடக் கற்ற பிறகு, காற்றில் துர எறிந்து பழகுதல் நின்று கொண்டே எறிந்து பழகுதல் எறிவதற்குரிய சிறந்த திறன் நுணுக்கங்களை வளர்க்கும்.


இரண்டு அல்லது மூன்று முறைக்குள்ளே அதாவது தட்டினைப் பற்றி மேலும் கீழும் ஏற்றி இறக்கும்பேதே சரியான பிடிப்பு வந்து விடவேண்டும். ஆள் காட்டி விரலான சுட்டுவிரல். கையை விட்டுத் தட்டு செல்லும் வரை தொட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் பழக


s வே |ண்டும்.


சுழல் தப்படியுடன் சுற்றி வருவதையும், துள்ளி வேகமாக வளைவதையும் சிரத்தையுடன் பயிலவேண்டும்.


இடுப்பு, அடி வயிறு, மார்பு, தோள் பகுதிகள், பின்தசைப் பகுதிகள் முழுமையும் தட்டினை எறிவதற்குப் பயன்படுவதால், எடைப் பயிற்சிகளின் மூலம், அவ்வுறுப் புக்களை வலிமை பெறப் பயிற்சி செய்க.


விரைவோட்டக்காரருக்குரிய பயிற்சிகள் அனைத் தையும் செய்க. முதலில் வட்டத்திற்குள் நின்று கொண்டு,


தட் டு இல்லாமல் சுற்றி எறியும் முறையைக் கற்றுக் கொண்டு, பிறகு தட்டுடன் பயில்க