பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


சாலடி, தாண்டல் முதலியவற்றிற்கு முடியாமல் போய் விடும். ஆகவே, அந்த அளவு முறையை அடுத்த பக்கம்


$.


இவ்வாறு ஒரே காலால் தாவி கீழே ஊன்றும்போது உடலின் எடை முழுதும் ஒரே காலில் விழுகிறது என் பதால், எடையைத் தாங்கக் கூடிய தன்மையில், தடுமாறிக் கீழே விழாமல் இருக்கக்கூடிய ஆற்றல்ைத் திரட்டி கால்களில் வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்.


கீழே ஒருகாலை ஊன்றும்போது, கை இரண்டுமே பக்கவாட்டில் விரிந்து, விழுந்து விடாத சமநிலையை உண்டாக்கும். ஆகவே ஒவ்வொரு முறையும் குதிகாலும் முன் பாதமும் தரையில் படும்படியாகக் கால்களை ஊன்றுகிற போது, கைகளைப் பக்கவாட்டில் விரிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.


தாவும் போது அதிக உயரமாக எழும்பித் தாவக் கூடாது. அவ்வாறு தாவினால், துரம் குறையும். சம நிலையை இழக்கின்ற சூழ்நிலை உண்டாகும். குதிகாலில் அடிபடலாம். அதன் காரணமாக, காலடியைத் தூக்கி வைக்கின்ற ஆற்றலை இழந்து விடலாம். ஆகவே அதிக உயரம் எழும்பக் கூடாது.


தாவிய உடனே எந்தப் பக்கத்தையும் பார்த்து, நோக்கத்தை மறந்து விடக்கூடாது. தாண்டி முடிக்க வேண்டிய மணற் பகுதி தூரத்தையே பார்ப்பது நல்லது. இது கால்களை அதிக அளவு விரிக்கும் (Split) தன்மை உள்ள நிகழ்ச்சி ஆகையால், இடுப்பின் அசைவு நன்றாக, பதமுள்ளதாக இருந்தால்தான் தாண்டுவதற்கு நல்ல வசதியான தன்மை அமையும்.