பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136



நூலாகப் பிறப்பெடுத்துக் கொண்டன. குழப்பமில்லாத விதிமுறைகளைக் கொண்டு வந்து உதவின. இவரது நூலை எல்லோரும் ஏகமனதாக, எந்தவித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்டார்கள் என்றால், அது பாராட்டுக்குரிய படைப்புதானே.

1742ம் ஆண்டு தோன்றிய இந்த விதிமுறைகள், ஏறத்தாழ 122 ஆண்டுகள் வரையில் நடை முறையில் இருந்து உதவின. விஸ்டு ஆட்டம் உலகமெங்கும் வளர்ந்து கொண்டேவந்தன.

1672ல் இங்கிலாந்தில் பிறந்து 1769 வரை அதாவது 97 வயது வரை வாழ்ந்த எட்மண்ட் ஹொய்லே ஒரு புது சரித்திரத்தை உண்டாக்கிப் புகழ் பெற்ற மனிதராக அமரரானார்.

ஹொய்லேவின் விதிமுறைகள் தான் உலக மெங்கும் பின்பற்றப்பட்டன. சீட்டாட்டத்தைப் பொறுத்தவரை ஹொய்லே விதிகள் உண்மையான வழிகாட்டிகளாக மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில் பல நாடுகளிலும் சீட்டாட்டம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அந்த விழிப்புணர்ச்சி மேலும் பல புதிய ஆட்ட முறைகளைத் தோற்றுவிக்கின்ற அளவுக்கு உச்சக்கட்ட உணர்ச்சியைத் தந்தது.