பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


நடப்பது, ஒடுவது, தாண்டுவது, எறிவது எல்லாம் இயற்கையான செயல்கள் தாம். இவற்றில் ‘நாம் எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறோம், கெட்டிக்காரராக இருக்கிறோம்’ என்று அறிய விரும்புவது அறிவுள் ளோர்க்கு அழகு.


இருப்பதை விருத்திசெய்து, மெருகேற்றிப்பார்ப்பது சிறந்த மனிதர்க்கு அழகு.


இந்தத் திறமைகளை மேலோங்க வளர்த்து மேன்மை யாக்கிக் கொண்டு, தம்மையும் மகிழ்வித்துக் கொண்டு, மற்றவர்களையும் மகிழ்விக்கிறவன் மாமனித மாவீரன். மகோன்னதமானவன்.


அந்த அற்புதத் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொண்டு, வேறு நாட்டுடன் போட்டியிட்டு வென்று வருபவன், பதக்கங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வருகிறவன் தியாகசீலன், நாட்டின் மானம் காக்கும் நல்ல புத்திரன்.


இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை அளித்து, சாகசங் களை வளர்த்து, சரித்திரங்களைப் படைக்கும் சக்தியைக் கொடுப்பது ஒட்டப்பந்தயங்களாகும்.


ஒட்டப் பந்தயங்களான ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றி பெறுபவன் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விடுகிறான்.


புகழ் மட்டுமா?-பொருள்.பெருமை. பூரிப்பு.பிறந்த நாட்டினரின் போற்றல்கள் எல்லாம் கிடைக்கும். பிறந்த பெருமையை அடைந்து விடும் பேரின்பமும் பெற்று விடுகிறான்.