பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

235


3. முன்புறமாக கால்வைத்து சாய்ந்து செய்யும் பயிற்சிகள். (Lunging Series)

4. இடுப்பை வளைத்துச் செய்யும் பயிற்சிகள் (Trunk Bending Series)

5. கொடியுடன் அணி நடை போடும் பயிற்சிகள் (Marching Series)

6. துள்ளிக் குதித்து செய்யும் பயிற்சிகள் (Jumping Series)

குறிப்பு : இந்த வகையான பயிற்சிப் பிரிவு முறைகள், இனி வருகிற எல்லா கண்காட்சிப் பயிற்சிகளிலுமே வரும். எனவே தான், இந்தப் பகுதியில் விளக்கமாகக் கொடுத்திருக்கிறோம்.

11.1.3 கொடிப் பயிற்சிகள்

ஆரம்பநிலை : இரண்டு கைகளிலும் உள்ள கொடியை, தொடைகளுக்கு முன்புறமாகக் கொண்டு வந்து வைத்திருக்கவும்.

எண்ணிக்கை 1.மார்புக்கு முன்புறமாகக் கொண்டு வந்து கைகளைக் குறுக்காக (Cross) வைக்கவும்

2. இடது காலை இடப்பக்கமாக எடுத்து வைத்து, கைகள் இரண்டையும் பக்க வாட்டில் நீட்டவும்.(Horizontal).