பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 63


இதைக் காணும் போது, மனிதன் இன்னும் மாபெரும் காரியங்களை செய்து காட்ட முடியும், மாபெரும் சாதனைகளை உருவாக்க முடியும் என்பதையே


இது கோடிட்டு காட்டுகிறது.


ரயன் இந்த சாதனையை எப்படி ஏற்படுத்தினார் என்றால்.அவர் தினமும் 40 மைல் துரத்திற்கு மேல் ஒடிப் பழகியிருக்கிறார். அவர் எடுத்துக் கொண்ட அரிய உழைப்பையும் அளப்பரும் முயற்சியையும் பார்த்தீர்களா?


இந்த ஓட்டத்தை எவ்வாறு ஓட வேண்டும்? ஓடி முடிக்க வேண்டும்?


உடலை அலட்டிக் கொள்ளாமல், பக்கவாட்டிலே கைகளைக் கொண்டு சென்று, இருபுறமும் அசைக்காமல் இயற்கையாக, எளிதாக, இனிதாக ஒடவேண்டும். இயல்பாக, ஒடும்போது கைகளைத் தூக்கி மார்புக்கு முன்னே வைத்திருப்போமே. அதே போல் ஒடவேண்டும். குதிகால் தரையில் படும்படியாக ஒடலாம். ஆனால் அதிர்ச்சி தருகின்ற முறையில் குதிகாலை ஊன்றி வைத்து ஒடக் கூடாது. தேவையானால், வாய்வழியாகவும் மூச்சிழுத்துக் கொண்டு ஒடலாம்.கீழே குனிந்து கொண்டு


ஓடாமல், நேர் கொண்டபார்வையுடன் ஒடவேண்டும். --r


நினைத்தாற்போல வேகமாக ஒட முயல்வது,


குதித்துக் குதித்து ஒடுவது, உயரமாக எழும்பியவாறு காலடி போட்டு ஒடுவது, தலையை இருபுறமும் அசைப் பது, தன்னுடைய சக்திக்குமேலே, தப்படியை (Step) அகலப் போட்டு ஒடுவது, கைகளை இயல்பாக வைக்காமல் பக்கவாட்டில் இழுத்து இழுத்து முன் கொண்டு வருவது போன்ற முறைகள் எல்லாம் சீக்கிரமே சோர்வை உண்டாக்கிக் களைப்பை மிகுதிப்படுத்தும்.