பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

105


சைகைக்குப் பிறகு, விரட்டித் தொடுபவர், ஓடி விரட்டி ஒருவரைத்தொட, தொடப்பட்டவர் தொட்டவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.

இருவரும் கையைக் கோர்த்துக் கொண்டு, மற்றவர்களை விரட்டித் தொட, அவர்களால் தொடப்பட்டவர், தொட்டவர்களுடன் வந்து சேர, இப்படியாக, சங்கிலித்தொடர்போல விரட்டுபவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, விரட்டித் தொடவேண்டும்.

தொடப்பட்டவர்கள் எல்லோரும் சங்கிலியாக சேர்ந்து கொள்ள, கடைசி ஆளைத் தொடும் வரை, ஆட்டம் தொடரும்.

இருவரும் கையைக் கோர்த்துக் கொண்டு, மற்றவர்களை விரட்டித் தொட, அவர்களால் தொடப்பட்டவர், தொட்டவர்களுடன் வந்து சேர, இப்படியாக, சங்கிலித் தொடர்போல விரட்டுபவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, விரட்டித் தொடவேண்டும்.

தொடப்பட்டவர்கள் எல்லோரும் சங்கிலியாக சேர்ந்து கொள்ள, கடைசி ஆளைத் தொடும் வரை, ஆட்டம் தொடரும்.

குறிப்பிட்ட எல்லைக்குள்ளே தான் மற்றவர்கள் ஓட வேண்டும். தப்பி ஓடுபவர்கள் எல்லைக்கு வெளியே போனாலும், அல்லது தொடப்பட்டாலும், விரட்டுபவருடன் சங்கிலித் தொடர் ஆகிவிட வேண்டும்.