பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


அளவுக்கு நீட்டி வாங்கிக்கொண்டு ஓடிவிடவேண்டும். தருபவரும் கையை நீட்டித்தரவேண்டும்.


ஒடாமலா வாங்க வேண்டும்? ஒடலாமா என்று கேட்பீர்களானால், ஓடாமலும் வாங்கலாம். ஒடியும் வாங்கலாம். ஆனால், ஒடிவருபவரின் ஒட்ட வேகத்தை அனுசரித்துத்தான் ஒடவேண்டும், அது பழகிய முறை யைப் பொறுத்ததாகும்.


அதிகமாக ஓட ஆரம்பித்துவிட்டு, பிறகுநின்று வாங்குவதோ, அல்லது நின்று கொண்டே வாங்கிப் பின் ஒட முயல்வதோ.நேரத்தை வீணாக்கும். ஆகவே, தயார் நிலையில் இருந்தே வாங்கவேண்டும்.


3. தறி ஓட்ட முறை (Shuttle): இது நேர்க்கோட்டிலே நின்றுகொண்டு, எதிரிலே ஒடி வருபவரிடமிருந்து தடியை மாற்றிக்கொண்டு ஒடுவது. தறியிலுள்ள நூல் கட்டை அங்கும் இங்கும் ஒடுவதுபோல, ஒரு குழுவில் உள்ள வர்கள் ஒடுவதால், இதற்குத் தறி ஒட்டமுறை என்று பெயர் வந்தது. இது 100 மீட்டர் தொடரோட்டத்துக்குப் பொருந்தும்.


முதல் ஒட்டக்காரரும் மூன்றாம் ஒட்டக்காரரும் ஒரு பக்கம் நிற்க, இரண்டாம் ஒட்டக்காரரும் நான்காம் ஒட்டக்காரரும் மறுபக்கம் நிற்க முதலாமவர் வலது கையில் தடியுடன் நின்று ஓடிவர, பெறுபவர் வலது கையை நீட்டி இரண்டாமவர் குறுந்தடியைப் பெற்று மீண்டும் ஒடிப்போய் மூன்றாமவர் வலதுகையிலே தருவர். அதேபோல் நான்காமவரும் வலது கையிலே வாங்கி ஓடி முடிப்பர். -


எதிரே வருபவரிடம் எட்டி வாங்குகிற லாவகம்தான் வேண்டும். கோட்டைத் தாண்டி விடாமலும், தடியை