பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

189


2. கைகளை முழங்கால்களின் உட்புறமாகக் கொண்டு சென்று. குதிகால்களின் பின்புறம் உள்ள தரையில் ஊன்றி வைக்கவும். விரல்களை விரித்து வெளிப்புறம் பார்ப்பது போல வைக்கவும்.

3. இப்போது உடல் கனமானது, கைகள் மீதும் கால்கள் மீதும் இருக்கிறது.

4. இந்த நிலையிலிருந்து கைகளையும் கால்களையும் நகள்த்தி வைத்து வைத்து நடக்க வேண்டும்.

இந்த நடை, கைகளுக்கு வலிமை அளிக்கிறது. உடல் நெகிழ்ச்சிக்கு உதவுகிறது.

9.15. புழு நடை (Worm walk)

1. முன்புறமாகக் குனிந்திருப்பது போல இருக்கவும். கைகளை நேராக ஊன்றி வைக்கவும். நீட்டியுள்ள கால்களிலிருந்து, இடுப்பை வளைத்து முன்புறமாக