பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


அழைக்கப் பெறுகின்றன. அவைகளில் ஒரு சில. 3000 மீட்டர், 5000 மீட்டர், 10,000 மீட்டர் மற்றும் மாரதான் ஒட்டப் பந்தயம் (26 மைலும் 385 கெஜமும்). அவைகளுள் 3000 மீட்டர் தடைதாண்டி ஒடும் ஒட்டம், (Steeple chase) மாரதான் ஒட்டம் மூன்றும் ஒலிம்பிக் பந்தயங்களில் இடம்பெறுகின்றன.


தகுதி:- எறிவதிலும், தாண்டுவதிலும், விரைந்தோடு வதிலும் வெற்றி பெற இயலாத உயரம் போதாத, எடையில்லாத, பலமில்லாத வீரர்கள் பங்குபெறும் பாங்கானப் போட்டிகள் இவை. ஆனால் தேவையோ - தன் உறுதி தளராத ஊக்கம்; தொடர்ந்து பணியாற்றும் திறமை, துணிந்து ஏற்றுக் கொள்கின்ற சகிப்புத் தன்மை, கடமை உணர்ச்சி, உடல் திறன், நிறைந்த நெஞ்சுரம், இத்தனையும் உடையவர்களே இதில் ஈடுபட முடியும். வெற்றி காண முடியும்.


ஆகவே, இதில் பங்கு பெற விரும்புவோர், ஒட் டத்தை முதலில் விரும்ப வேண்டும். அதனை ரசிக்வும் கற்றுக் கொள்ளவும், நேசிக்கவும், மனமார இணைந்து விடவும் வேண்டும். இது தனக்குத் தானே தந்து கொள் கின்ற தண்டனை போல்தான். ஆகவே, எண்ணித் துணிய வேண்டும். துணிந்த பின், தொடர்ந்து பணியாற்ற வேண்டும், செயல்போற்ற வேண்டும்.


இப்போட்டி ஒட்டத்திற்கு கடினமான உழைப்பே தேவை. ஒரே ஒரு செயல்தான் வேண்டும். அதுதான் ஒட்டம், ஒடிக் கொண்டே இருப்பதுதான் நோக்கம்.உடல் தளரும்வரை ஒடுவதுதான் உழைப்பு, மழையோ, வெயிலோ, பனியோ, குளிரோ, புயலோ, நிழலோ எதுவாக இருப்பினும், ஒட்டத்தை நிறுத்தாது தினம்