பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


20 கெஜ தூரத்தில் ஒரு கோட்டைப் போட்டு, அதைப் போய் விரைவாக ஓடித் தொட்டு விட்டுத் திரும்பச் செய்கிற குறுகிய விரைவோட்டங்கள் (short runs)

ஓடுபவர் கையிலே கிரிக்கெட் மட்டை, போன்றவற்றைக் கொடுத்து, விரைவாக முடிப்பவர் 1 ஒட்டம் எடுத்தார் என்று கணக்கிடுதல் போல ஓடச் செய்யவும்.

பந்து விளையாட்டுப் பயிற்சிகள்:

இரண்டு பேர்களை ஒரு குழுவாகப் பிரித்து, ஒருவர் கையில் சிறு பந்து ஒன்றைக் கொடுத்து, மற்றவரை ஓடச் செய்து, அவரை, பந்தால் அடிக்கச் செய்தல், மற்றவர் பந்து தன் மீது படாமல் தப்பி ஓடவும், பந்து வைத்திருப்பவள் குறி பார்த்து அடிக்கவும் செய்தல். ஒரு தடவை பந்தால் அடித்ததும், அடித்தவர் ஓடவும், அடிபட்டவர் அடிக்க முயலவும் என மாற்றிக் கொண்டு ஆடுதல் (Hitting partner)

ஒரு வட்டம் போட்டு, 5 அடி அல்லது 6 அடி தூரத்திற்கு அப்பால் நின்று. அந்த வட்டத்திற்குள் பந்து விழுமாறு, பந்தை எறிதல்.

கூடைப் பந்தாட்ட ஆடுகளம் இருந்தால், அந்த வளையத்திற்குள் போய் பந்து விழுமாறு எறிந்து பழகுதல் (Throwing into circle)