பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

57


சி 4

1 அடி உயரத்தில் கயிறை அல்லது குச்சியைப் பிடிக்கச் செய்து, ஒருவர் ஒருவராக ஓடி வந்து தாண்டுதல். (முன்புறமாக ஓடி வந்து)

1 அடி உயரத்தில் கயிறு பிடிக்கச் செய்து, பக்கவாட்டில் ஓடி வந்து தாண்டுதல்.

3 தப்படிகள் ஓடி வந்து, பிறகுத் தாவிக் குதித்து, குனிந்து உட்காருதல்.

கயிறு தாண்டிக் குதிப்பது போல, (Skipping) கைகளை சுழற்றித் தாண்டல்.

கம்பளிப் பூச்சி நடப்பது போல, முன்புறமாகக் கைகளை ஊன்றி, முழங்காலில் நின்று, கைகள் இருக்குமிடத்தில் கால்கள் வந்த பிறகு, கைகளை முன்புறமாக நகர்த்தி நடத்தல்.

கரடி நடப்பது போல நடத்தல்.

நண்டு நடப்பது போல நடத்தல்.

1.2. பிடித்தல், எறிதல், உதைத்தல், தூக்குதல் போன்ற பயிற்சிகள்.

பந்தைத் தூக்கி உயரே எறிதல், உயரத்திலிருந்து வருவதைப் பிடித்தல்.

பந்தைத் தரையில் துள்ளவிட்டு, மேலே வரும் போது பிடித்தல்.