பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 DI நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


விழித்திரு என்பது உங்களுக்கான நிகழ்ச்சிகள் தொடங்கும் நேரத்தைத் தெரிந்து கொண்டு, நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே, விழிப்புடன் இருந்து, வேண்டிய உடற்பயிற்சிகளை யெல்லாம் செய்து. உடலைப் பதப்படுத்தி வைத்திருக்க வேண்டும். திடீரென்று ஒடிப்போய், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது, உடல் ஒத்துழைக்காது.உடல் உறுப்புக் களில் பிடிப்பு ஏற்பட்டு, வலி ஏற்படவும் ஏதுவாகிவிடும்.


எனவே விழிப்புடன் இருந்து, போட்டிக்கு வேண் டிய நிகழ்ச்சிகளுக்கேற்ப, செயல்கள் ஆற்றி, சிறப்புற பணியாற்றவேண்டியது உடலாளர்களின் ஒப்பற்ற கடமை யாகும. போட்டியில் கலந்து கொள்ளும் முன்னும் பின்னும்:


உடலாண்மைப் போட்டிகளில் பங்கு பெற்று, உடலை ஆளும் ஆற்றலை வளர்த்து, ஒப்பற்ற சக்தியை உலகுக்கு உணர்த்த இருக்கும் மாவீரர்களே, மாணவர் களே, இளைஞர்களே, மாணவிகளே, மற்றும் ஆர்வமுள் ளோரே, உங்கள் முன் சில கருத்துக்களை கூற ஆசைப்


படுகிறேன்.


(1)தேக அமைப்பு, திறமை, உழைக்கும் சக்தி, உயர்ந்த ஆற்றல் இவைகளுக்கேற்பவே ஒவ்வொரு உடலாண்மை நிகழ்ச்சியும் (Athletic event) உருவாகி இருக்கிறது. இவற்றில், உங்களுக்கு எந்த நிகழ்ச்சி ஒத்து வரும். உங் களால் முடியும் என்று இப்போது உங்களால் உணர்ந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். அந்தந்த நிகழ்ச்சிக்கு வேண்டிய தகுதி, ஆற்றல், பற்றிய குறிப்புரை கள் அந்தந்த நிகழ்ச்சியில் கொடுக்கப் பெற்றுள்ளது.