பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


மண்ணைப் பார்ப்பது போல சுற்றிப் பிடித்து, இடது கைக்கும், வலதுகைக்கும் 2அடி இடை வெளியிட்டு, கட்டை விரல்களும், முன் விரல்களும் கோலை அடியில் தாங்கி இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.


இனி ஓடிவருகின்ற முறையைக் காண்போம்.


தாண்ட உதவும் கோலை, கஷ்டப்பட்டுக் கொண்டு தூக்காமல், அதையே பாரம் என்று கருதாமல்; எளிதாக, இயல்பாக, இனிதாக, முன் கூறியபடியே, கோலின் தலைப் பாகம் தலைக்கு முன்பாக மேலோங்கி இருப்பது போல, கைகளில் ஏந்திக் கொண்டு ஒடி வரவும்.


ஒட்டம் தொடங்கியவுடன், மெதுவாக ஒடி வந்து, அருகில் வர வர, முழு வேகத்துடன் ஒடி வர வேண்டும். எங்கிருந்து கிளம்புவது என்று கேட்கலாம். ஒடி வரத் தொடங்கும் இடம், குறைந்தது 90 அடியிலிருந்து 100 அடியாவது இருக்க வேண்டும். அதற்கு மேல் அதிக துரத்திலிருந்து ஓடிவந்தால் தான், ஒட்டத்தில் வேகம் கிடைக்கும் என்று கூறுவோர், இன்னும் கொஞ்ச துரத்தில் இருந்து ஓடி வரலாம். அதனால் ஒன்றும் பாதகமில்லை. ஒட்டம் சீராக இருக்க வேண்டும். கையிலுள்ள கோலை அப்புறமோ இப்புறமோ ஆடி அசையும் வகையிலே தூக்கிவரக்கூடாது.


அப்படி அசைத்தால், ஒட்டத்தில் தடுமாற்றமும், தாண்ட உதவும் பெட்டியில் கோலினை ஊன்றுவதில் தவறும், தாண்ட முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.


நீளத்தாண்டலுக்கு ஓடி வருதல் போலவே, கோலையும் ஏந்திக் கொண்டு, குதிகால் தரையில் படுவது போலவும், கால் இயக்கம் போலவே கைகளின் இயக்கமும்