பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

கொத்திப் பாம்பாகக் காவல் காத்தாலும், அதையும் மீறி அரங்கத்திற்குள் நுழைந்து, அனைவரையும் உலுக்கிய பெண் பற்றியும் நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்களுக்கு இடையே பந்தயங்கள் என்றால், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெண்களுக்கு இடையேயும் தனியாகப் போட்டிகள் நடந்தனவே!

ஆண்கள் ஜீயஸ் என்ற தெய்வத்தின் முன்னே பந்தயங்களை நடத்தினார்கள் என்றால், பெண்களும் ஹீரா என்னும் பெண் தெய்வத்தின் முன்னே நடத்தி வந்தார்களே!

ஆண்கள் பிறந்த மேனியுடன் பந்தயங்களில் ஓடினார்கள் என்றால், பெண்களும் அதற்குப் போட்டியாக, இடுப்பில் கட்டிய அரைப் பாவாடையுடன், இடுப்பிற்கு மேலே அரை நிர்வாண மேனியுடன், அவிழ்ந்த தலையுடன் ஒடி மகிழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றனவே!

அந்தக் காலம் தொடங்கி இந்த நாள் வரை, பெண்கள் தனித்தன்மை மிக்கவர்கள் என்று மட்டும் பெயர் பெறுவதில் பிரியமுள்ளவர்களாக விளங்காமல்; ஆண்களுக்கு இணையாக ஆற்றல் மிகு காரியங்களில் ஈடுபடுவதிலும் ஆர்வமும் அக்கறை நிறைந்தவர்களாகவும் விளங்கிவந்திருக்கின்றார்கள்.