பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


திருத்திக் கொள்ளமுடியவில்லை. திருத்திக் கொண்டிருந் தால், இன்னும் குறைந்த நேரத்திற்குள் ஒடியிருக்க முடியும் என்று பயிற்சி நிபுணர்கள் கருதுகின்றார்கள்.


1896-ம் ஆண்டு 12 விநாடிக்குள் ஒடிய 100 மீட்டர் தூரத்தை இன்று 97 விநாடியில் ஒடுகின்றார்கள் என்றால் விரைவோட்டத்தின் வேகத்தை நாம் காண முடிகிற தல்லவா?


200 மீட்டர் ஓட்டத்திற்கான முறைகள் (Method) எவ்வாறு இருக்கவேண்டும்?


50,100 மீட்டர் ஒட்டத்திற்கு போலவேதான் தொடக் கமும் முடிவும், ஆனால் இடைதுாரத்தில் தொடர்ந்தோடு கின்ற முறைகளில்தான் மாற்றம் உள்ளது. இப்போட்டி யில் 200 மீட்டர் துரத்தைக் கடக்க வேண்டுமல்லவா!


உலக வெற்றி வீரர்களைக் கவனிக்கிற பொழுது, அவர்கள் ஒடிய வேகத்தின் அளவு - முதல் 100 மீட்டர் தூரத்திற்கு எடுத்துக் கொண்ட நேரத்தைவிட, இரண் டாவது 100 மீட்டருக்காக ஒடும் நேரம் குறைவாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு இருவரை எடுத்துக் கொள் வோம்.1936ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற “ஜெசி ஒவன்ஸ்’ என்பவர் 200 மீட்டரை ஒடிய நேரம் 20.3 வினாடி, முதல் 100 மீட்டருக்கு எடுத்துக் கொண்டநேரம் 102 வினாடி அதுபோல 1968ம் ஆண்டு வெற்றி பெற்ற “டாமி ஸ்மித்’ என்பவரின் நேரம் 19.8 வினாடி முதல் 100 மீட்டருக்கான நேரம்101. ஆகவே, முதல் 100 மீட்டரை விட இரண்டாவது 100 மீட்டர் தூரத்தை வேகமாக ஒடி முடிக்க வேண்டியது மிக அவசியம்.


இவ்வாறு முழுமூச்சுடன் ஒடமுடிந்தவரே நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்பதை வரலாறு விளக்குகிறது.