பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 25


இன்று விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் யார்?


ஆர்வம் உள்ள அனைவருமே இந் நிகழ்ச்சிகளில் போட்டியாளராகப் பங்கு பெறுகின்றனர். ஆற்றல் படைத்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் முதியோர் கள் எல்லோருமே பங்கு பற்றினாலும், அவர்களை நாம் இருவகையாகப் பிரிக்கிறோம். முதலாவதாக, பொழுது போக்கு விளையாட்டு வீரர்கள். இரண்டாவதாக, வணிகமுறை விளையாட்டுக்காரர்கள்.


பொழுதுபோக்கு விளையாட்டு வீரர்கள் (Amateaurs) என்பவர் யார்?


விளையாட்டுக்களில், தான் பெறும் இன்பத்திற்காக, மனநிறைவுக்காக மட்டுமே போட்டியில் பங்குபெறு வோரை, தங்களுடைய ஒய்வு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கவும் போட்டியில் கலந்து கொண்டு பெறும் பரிசிலும் புகழிலும் திளைக்கவுமே போட்டியிடும் விளையாட்டு வீரர்களைப் “பொழுது போக்கு விளையாட்டு வீரர்கள்” என்று அழைக்கிறோம். உலக ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஒலிம்பிக் போட்டியில், மாநில, மாவட்ட வட்டப் போட்டிகளில் கலந்து கொள் வோர் அனைவரும் பொழுதுபோக்கு விளையாட்டு வீரர்களே.


வணிக முறை விளையாட்டு வீரர்கள் (Professionals) என்பவர் யார்?


பொழுதுபோக்கு வீரர்களாக இருந்து அதிக


அளவுத் திறமையும் ஆற்றலும் உலகப் புகழும் கிடைத்த பிறகு, தாங்கள் கெட்டிக்காரர்களாக இருக்கும் விளை