பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 153


டல் எடை முழுதும் இருக்க, இடது காலை முன்போல வைத்துச் சுழல் தப்படி எடுத்து வேகமாகச் சுற்றி எறியவும்.


சுழல் தப்படி (Pivot) என்றால் என்ன?


ஒரு கால் அச்சாணி போல் நிற்க, மறுகால் அதைச் கற்றி வருவதற்கு சுழல் தப்படி என்று பெயர்.


அதாவது, இடது காலை அழுத்தி ஊன்றி, கையில் ள்ள தட்டை இறுகப் பிடித்து, வலது காலை துள்ளியபடிதுக்கிவைக்கும்போது, எறிபவர் வட்டத்தின் மையஇடத்துக்கு வந்து விடுவார். பிறகு வலது கால் நிற்க, இடது கால் ஒரு முறை சுற்றும் பிறகு இடது கால் ஊன்றி நிற்கும் போது, வலது கை பக்கவாட்டில் கீழ் இருந்து முன்னுக்கு வரும். அப்பொழுது வலதுகை மேலே எழ, இடுப்பு வலப்பக்கமிருந்து இடப்பக்கத்திற்குத் திரும்பும் போது, தோள்மட்டத்திற்குக் கீழிருந்து, இடமிருந்து வலம் சுற்றுவதுபோல, சுட்டு விரலால் தட்டினை சுழற்றி விட்டு


வறிய வேண்டும்.


அப்பொழுது இரண்டு கால்களும் தரையிலே இருக்க வேண்டும். கண்கள், பறக்கின்ற தட்டினைப் பார்க்கும் நிலையில், உடல் சமநிலையை இழக்காத நிலையில் நின்று கொண்டிருக்க வேண்டும்.இதுவே சுழல் தப்படியுடன் தட்டினை எறிகின்ற முறையாகும்.


தட்டினை எறியும் போது ஒருசில முறைகளைக் கண்காணிக்கவும் வேண்டும்; கையாளவும் வேண்டும். படைப்பிடிக்கவும் வேண்டும். எதிர்காற்றாக இருந்து எறிய வேண்டிய சூழ்நிலை அமைந்தால், 35 கோண அளவில் எறிந்தால், தட்டினைக் காற்று அழுத்தாது. காற்றைப் பிளந்து கொண்டு தட்டுப் போகக் கூடிய தன்மையில்