பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 163


உறுதியாக வேலினைப் பிடிக்கலாம். ஆனால் இறுக்கமாகப் பிடிக்கக் கூடாது. சிலர் பிடிப்பின்’ கடைசியில் வைத்துப் பிடிப்பார். ஆனால் பிடிப்புக் குள்ளே கைப்பிடி இருப்பதுதான் நல்லது.


எவ்வாறு ஓடிவரவேண்டும்? ஓடிவந்து எறிகின்ற முறையும் எவ்வாறு இருக்க வேண்டும்?


மெதுவாக ஓடிவந்தால் எறிவதற்கான சக்தி உடலுக்குக் கிடைக்காது. அதற்கு மாறாக, அதிவேகமாக ஓடிவருவதும் சிறந்த பயனை அளிக்காது. தடுமாற்றம் எற்பட ஏதுவாகும். முரட்டு வேகமானது திடீரென நிற்கவோ, சீராக வேலினை எறியவோ வாய்ப்பளிக்காது வறவதற்கும் அதிக சிரமமாக இருக்கும்.


ஆகவே, நடுத்தர வேகத்துடன் ஓடிவந்து, கடைசியில் கர்சிதமாக வேலினை கையிலிருந்து விடுவித்து வீசுகின்ற


முறையில் தான் அதிக தூரம் எறியமுடியும்.


எவ்வளவு தூரத்திலிருந்து ஓடிவந்தால் ஒரு வருக்கு முழு வேகம் (Full Speed) கிடைக்கும் என்பதைப் பொறுத்தே, ஒடிவரும் (Rum up) துரத்தைக் கணக்கிட வேண்டும். எறியும் சிறந்த வீரர்கள் அனைவரும் 100 அடிவரையில் ஒடும் தூரத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்றால், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், நடுத்தரமான போட்டியாளர்கள் எல்லாம் 70 அல்லது 75 அடி துரத்தை நிர்ணயித்துக் கொள்வது (ஒடிப்பார்த்து குறித்துக் கொள்வது) நல்லது.


அதிக தூரம் ஓடிவந்தால், ஒடிவரும் தூரத்திலேயே ல் களைத்துப் போகும். அவ்வாறு உடல் களைத்துப் போக விடக் கூடாது.ஓடிவரும் வேகமானது எறிவதற்கான