பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

237


4. 1 இடது கையை பக்க வாட்டில் நீட்டி, வலது கையை முழங்கை மடிய வளைத்துக் கொண்டு வந்து, கொடியைப் பிடித்துள்ள மணிக்கட்டுப்பகுதி, இடது கை தோள்புறமாய் இருக்க, கொடியை உயரவாக்கில் நிறுத்திப் பிடிக்கவும்.

2. இரண்டு கைகளையும் தலைக்கு மேற்புறமாக உயர்த்தி, கொடிகளை உயர வாக்கில் பிடித்து முழுக்குந்தலாக (Full Squat) உட்காரவும்.

3. முதல் எண்ணிக்கை போல நிற்கவும்

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

5. 1. இடது பக்கமாக இடது காலை ஓரடி எடுத்து. வைத்து, கையில் பிடித்துள்ள கொடிகளை தலைக்குப் பின்புறமாகக் கொண்டு வந்து, குறுக்காக வைக்கவும்.

2. இடது பக்கமாக கால் வளைத்து சாய்ந்து, குனிந்து கொடிகளை இடது பக்கமாகக் கொண்டு, தலைக்கு குறுக்காக வைக்கவும்.

3. முதல் எண்ணிக்கைக்குக் கொண்டு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

6. 1. இடது காலை பின்புறமாக ஓரடி எடுத்து வைத்து, பின் புறமாக சாய்ந்து (Lunge), கொடிகளை பக்கவாட்டிற்குக் கொண்டு போய் அப்படியே உயர்த்தவும்.