பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


4.8. என்னைப் பிடிக்க முடியாது முதலையே! (Crocodile cannot catch me)

குறைந்தது 50 அடி தூரமாவது மைதானத்தில் இருந்தால் நல்லது. இரண்டு கோடுகளை இரண்டு எல்லையிலும் குறித்து, நடுவில் ஓரிடத்தையும் குறித்திடவேண்டும்.

இரண்டு கோடுகளும் ஆற்றின் கரையாகும். நடு இடம் தான் முதலை வசிக்கும் இடம்.

முதலையாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து, நடுவில் நிற்கச் செய்ய வேண்டும். மற்ற குழந்தைகள், ஒருபுறம் உள்ள எல்லைக் கோட்டில் போய் நிற்க வேண்டும்.

ஆசிரியர் விசிலுக்குப் பிறகு, ஒரு கரையில் (கோட்டில்) நிற்கும் குழந்தைகள், மற்ற எல்லைக் கோட்டை நோக்கி ஓட வேண்டும். அவர்கள் அந்தக் கரையை அடையாமல், நடுவில் நிற்கிற முதலையானது, தொட்டோ அல்லது பிடித்தோ விட வேண்டும்.

முதலையிடம் தொடப்படாமல், அல்லது பிடிபடாமல் ஓடி, எதிரே உள்ள கரையைச் சேர் கிறவர்கள், வெற்றியாளர்கள் ஆவார்கள்.

குழந்தைகள் ஓடுகிறபோது, "முதலையே என்னைப் பிடிக்க முடியாது" என்று கத்திக் கொண்டே ஓட வேண்டும்.