பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டமைப்பு அல்லது வடிவம் இல்லாதிருத்தல்.

apnoea : மூச்சு நிறுத்தம் ; மூச்சின்மை : மூச்சுவிடுதல தற்காலிகமாக நின்றுபோதல், தேவையான கார்பன்டையாக்சைடு (CO₂) இல்லாதிருத்தல், சுவாசமையத்தில் தூண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும்.

apocrine glands : வியர்வைச் சுரப்பிகள் : புறச் சுரப்பிகள் அக்குள். பிறப்புறுப்புகள், விரைப்பைக்கும் கருவாய்க்கும் இடைப் பட்ட பகுதி ஆகியவற்றில் இவை உள்ளன. பூப்பெய்திய பின்னர் உடலில் ஏற்படும் வாடைக்கு இவையே காரணம்.

apod : கால் இல்லா உயிரினம்; கால் அல்லது வயிற்றடிச் செதிள்கள் இல்லாத உயிரினம்.

apodia : காலின்மை ; அடிக்காலின்மை, பாதமின்மை : பிறவியிலேயே கால்கள் இல்லாதிருத்தல.

apomorphine : வாந்தி மருந்து : ஊசி மூலம் செலுத்தும்போது வாந்தி வரக்கூடிய கடுமையான மருந்து. நஞ்சுண்டவர்களின் வயிற்றிலிருந்து நஞ்சை வெளிக் கொணர்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது

aponeurosis : திசுப்பட்டை , தசை நாண் படலம் ; தசைச் சவ்வு. மினு மினுப்பான. தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை . இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது.

aponeurosis : திசுப்பட்டை வீக் கம்: தசை நாண் படல அழற்சி; தசைச் சவ்வு அழற்சி : திசுப்பட்டையின் அழற்சி.

apophysis : எலும்புப் புடைப்பு : எலும்புப் புறவளர்ச்சியுற்று நீட்

59

டிக் கொண்டிருத்தல் அல்லது புடைத்திருத்தல்.

apoplexy: வலிப்பு நோய் (சன்னி ); உறுப்பின் உட்கசிவு; நினைவிழப்பு வீழ்ச்சி; அதிர் நிகழ்வு : மூளையின் குருதிப் பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உணர்ச்சி, செயல் ஆகியவற்றின் இழப்பு.

apositia : உணவு வெறுப்பு : உணவு உண்பதில் வெறுப்பு உண்டாக்கும் நோய்.

appendicectomy : குடல் முளை அறுவைச் சிகிச்சை : குடல் வாலையினை அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றுதல்.

appendicitis : குடல்வால் அழற்சி : குடல் முளை அழற்சி : குடல்முளை வீக்கம் அல்லது அழற்சி.

appendix: குடல்வால் ; குடல் முளை : குடலின் மேற்புறத்திலிருந்து தோன்றும் சிறுமூளை இது குடல்முளை என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும், 50.8 முதல் 152.4 மி.மீ. வரை நீள முடைய தாகவும் இருக்கும்.

apperception : புலன் உணர்வு: பொறியுணர்வை வாங்கிப் புலனு ணர்வாக்கும் இயல்பு.

apraxia : கைமுடக்கம்; செயல் திறன் குறை : மூளைக் கோளாறு காரணமாகப் பொருள்களைத் திறம்படக் கையாள்வதற்கு இயலாதிருத்தல்.

aptin : ஆப்டின் : ஆல்பிரினால் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

aptitude : நாட்டம் பணிகளைச் செய்வதில் இயல்பான உளவியல் அல்லது உடலியல் நாட்டம் மற்றும் திறம்பாடு.

apyrexia : காய்ச்சல் இன்மை : காய்ச்சல் நின்றிருத்தல்.