பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

antiarrhythmic : இதய சீர்மாறிய துடிப்பு மருத்துவம் : பல்வேறு இதயத் துடிப்புக் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும், சிகிச்சை முறைகளும்.

antibacterial பாக்டீரியா எதிர்ப்பு மருந்து; நுண்ணுயிரிமுறி : பாக்டீரியாக்களை அழிக்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிற ஒரு மருந்து.

anti beri beri . தவிட்டான் எதிர்ப்பு மருந்து : ஊட்டச்சத்துக் குறைவினால் உண்டாகும் தவிட்டான் என்ற நோய்க்கு எதிரான மருந்து. எடுத்துக்காட்டு ; வைட்டமின் B கலவையிலுள்ள தையாமின்.

antibiosis : உடன்வாழ் ஒவ்வாமை எதிர் உயிரிகள், உயிர்ப்பகைமை : ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள், மற்றோர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாக இருக்கும் தன்மை.

antibiotics : நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள். உயிர்க்கொல்லி; நுண்ணுயிர்க் கொல்லி ; நோய் முறியம் பூஞ்சணம், பாக்டீரியா போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நோயக்கிருமி எதிர்ப்புப் பொருள்கள். பென்சிலின் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட டெட்ராசைக்ளின் போன்றவை நோய் உண்டாக்கும் உயிரிகளுக்கு எதிராகத் திறம்பட வேலை செய்கின்றன, இவற்றை வாய்வழியாகவும் கொடுக்கலாம் நியோமைசின், பாசிட்ராசின் போன்றவை அதிக நச்சுத்தன்மையுடையனவாக இருப்பதால், உள்ளே பயனபடுத்தப்படுவதில்லை. புறக்காயங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

antibody : நோய் எதிர்ப்பொருள; தற்காப்பு மூலம் : தீங்கு தரும் அயற

பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.

anticholinergic : பித்தநீர் நரம்புக்கோளாறு பித்தநீர் நரம்பு, அசிட்டில்கோலின் என்ற ஒரு வேதியியல் பொருளின் மூலமாகத் தனது தூண்டல்களை நரம்பு அல்லது இதய நரம்புச் சந்திப்புகளுக்கு அனுப்புகிறது இந்த நடவடிக்கைக்குத் தடையாக இருக்கும் செயல்.

anticoagulant : குருதிக்கட்டுத் தடைப் பொருள் : உறைவு எதிர்ப்பி : உடலில் காயம்பட்டு இரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி வீணாவதைத் தடுப்பதற்காக. இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் இரத்தத்தில் உள்ளது. இவ்வாறு இரத்தம் உறையச் செய்வதைத் தடுக்கும் பொருள் குருதிக்கட்டுத் தடைப் பொருள் ஆகும். நோயியல் பரிசோதனைகளுக்காக இரத்தம் முழுவதையும் எடுக்க வேண்டியிருக்கும்போது, ஆக்சாலிக் அமிலம் (வெல்லக அமிலம்) குருதிக் கட்டுத் தடைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இரத்தம் செலுத்துவதற்காக இரத்தம் எடுக்கும்போது. சோடியம் சைட்ரேட் குருதிக் கட்டுத் தடைப்பொருளாகப் பயனபடுகிறது.

anticonvulsant வலிப்புத் தடைப் பொருள்; வலிப்படக்கி; வலிப்புமுறி. வலிப்பை அறவே ஒழிக்கிற அல்லது தடுக்கிற பொருள்

antidepressants : சோர்வு நீக்க மருந்துகள் ; உளச் சோர்வுப் போக்கிகள் : சோர்வினை அகற்றுகிற மருந்துகள் டிரைசைக்ளிக் குழுமத்தைச் சேர்ந்த மருந்துகள் இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. அகச்சோர்வுக் கோளாறுகளுக்கு இவை பயன்படுகின்றன