பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இது நோய் நுண்மத் தடைச்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது. aniridia : விழித்திரைக் கோளாறு: விழிச் சுருக்குத் தசையின்மை; திரையின்மை : கண்ணில் விழித்திரை இல்லாதிருத்தல் அல்லது குறைபாடுடையதாக இருத்தல். இது பெரும்பாலும் பிறவியிலேயே ஏற்படும் கோளாறு.

anischuria : சிறுநீர் ஒழுக்கு சிறு; நீர் அடக்க இயலாமை; சிறுநீர் கட்டற்ற ஒழுக்கு : சிறுநீரை அடக்க இயலா வண்ணம் கட்டற்ற முறையில் ஒழுகிக் கொண்டிருப்பது.

anisocoria : சமனிலாக் கண்மணி : ஒழுங்கற்ற கண்பார்வை : இரு கண்மணிகளின் விட்டம் ஏற்றத்தாழ்வுடன் இருத்தல்

anisocytosis : சமளிலாச் சிவப்பணுக்கள் : சமனிலா செல்லியம் : இரத்தச் சிவப்பணுக்கள் வடிவளவில் ஏற்றத்தாழ்வுடன் இருத்தல். anisomelia : சமனிலா உறுப்புகள் : உடல் உறுப்புகள் சமச்சீரான நீளத்தில் இல்லாதிருத்தல்.

anisometropia : கண்ணொளிக் கோட்ட மாறுபாடு : சமனிலா பார்வை வீக்கம். ஒத்த பார்வையின்மை : இரு கண்களின் ஒளிக்கோட்டமும் மாறுபட்டிருத்தல்.

ankle clonus : கணுக்கால் தசைத் துடிப்பு, கணுக்கால் உதறல் : உள்ளங்காலில் அழுத்தம் அதிகரிப்பதன் காரணம் பாதம் பின்புறமாக வளைகிறபோது பின்கால் தசைப் பகுதி விரைவாக மாறி மாறிச் சுருக்கமும் தளர்வுமாகத் துடித்தல்

ankylurethria : சிறுநீர் வடி குழாய் அடைப்பு; சிறுநீர் வடிகுழாய் குறுக்கம் சிறுநீர் வடிகுழாய் அடைப்பு அல்லது சிறுநீர் வடி குழாய் குறுகியிருப்பது.

49

ankyloblepharon : கண்ணிமை இணைவு; ஒட்டிய இமை கண்ணிமைகளின் விளிம்புகள் இயற்கைக்கு மாறாக ஒட்டிக் கொண்டிருத்தல்.

ankylosis: மூட்டு விறைப்பு: நோய் காரணமாக ஒரு மூட்டு விறைத்து விடுதல்.

annular : மூட்டு இணைப்புத்தசை நார்: வளைய உரு: மோதிரம் போன்ற வளைய வடிவுடைய தசை நார். மணிக்கட்டு. கணுக்கால் மூட்டுகள் உள்ளது போன்ற நீண்ட எலும்புகளை இது பிணைக்கிறது.

arodyne : நோயாற்றும் மருந்து (அனோடைன்); வலியகற்றி, வலி நீக்கி : வலிமை நீக்கும் ஒருவகை மருந்து.

anogenital : குதம் - பிறப்புறுப்பு மண்டலம் : குதம், பிறப்புறுப்பு மண்டலம் தொடர்பான. anomaly : முறை திறம்பிய; நெறி விலகல் : இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட அல்லது வேறுபட்ட அல்லது இயல்பு திறம்பிய.

anomia : பெயர் மறதி நோய்: பொருள்களின் அல்லது ஆட்களின் பெயர்களைக் கூறமுடியாத நிலை,

anomie : தனிமையில் வாழ்பவர் : மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மற்றவர்களுடன் இணைந்து வாழ முடியாத காரணத்தால் தனிமையில் வாழும் ஒரு நபர்

anonychia: நகமின்மை : நகங்கள் இல்லாதிருத்தல்.

anoperineal: குதம் - எருவாய் மண்டலம் : குதம், விரைப்பைக்கும் எருவாய்க்கும் இடைப்பகுதி ஆகியவை தொடர்பான மண்டலம்.

anopheles : மலேரியாக் கொசு; முறைக்காய்ச்சல் கொசு : முறைக் காய்ச்சலை (மலேரியா) உண்டாக