பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


அதனால் பூனை திண்டாடிப் போய், வழி பெற முயற்சித்து அவதிப்படுவது, குழந்தைகளுக்கு வேடிக்கையாக இருக்கும். மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

எலி பிடிபட்ட பிறகு, வேறு இருவரை எலி பூனையாக இருக்கச் செய்து, ஆட்டத்தைத் தொடரவேண்டும்.

குறிப்பு : இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போடுகிற வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்.

4.2 வாலைப்பிடி (Snatching the tail)

விளையாட்டில் பங்கு பெறுகிற குழந்தைகள், தங்கள் இடுப்பின் பின்புறம் வண்ணக் காகிதத்தில் அல்லது வண்ணத் துணியில் நீட்டமுள்ளதாக எடுத்து, வால் போல செருகிக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு வால் இருப்பதாக அர்த்தம்.

ஆசிரியர் விளையாடுங்கள் என்று விசில் கொடுத்தவுடன், ஒவ்வொருவரும், மற்றவர்களின் வாலை பிடுங்கிட முயற்சிக்க வேண்டும்.

அதே சமயத்தில்; தன் வாலை மற்றவர்கள் பறித்து விடாமல் காத்துக் கொள்ளவும் வேண்டும்.

வால் பிடுங்கப்பட்டவர், உடனே ஆட்டம் இழந்து விடுகிறார். அதிகமான வால்களைப் பறித்து, தன் வாலை இழக்காதவரே, விளையாட்டில் வெற்றி பெற்றவராவார்.