பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் தட்டணுக்கள் அதிகமாக இருத்தல். இதனால் குருதி நாளங்களினுள் குருதி உறைவு ஏற்படும்.

thrombocytopenia : தட்டணுக் குறைபாடு;குருதித்தட்டிணுக்குறை: இரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக இருத்தல். இதனால், காயங்கள் ஏற்படும்போது நெடுநேரம் இரத்தம் வெளியேறும்.

thrombocytopenic Purpura : தட்டணுச் செம்புள்ளிநோய் : இரத்தத்தில் தட்டணுக்களின எண்ணிக்கை குறைவாக இருத்தல், சளிச் சவ்விலிருந்து விட்டுவிட்டு இரத்தம் கசிதல், தோலின்மேல் கருஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும் ஒரு நோய். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் உண்டாகிறது. இதில் இரத்தக்கசிவு நெடுநேரம் நீடிக்கும்.

thromboembolic : குருதிக் குழாயடைப்பு : குருதிக்கட்டி விடுபட்டு குருதியோட்டத்துடன் உடலின் இன்னொரு பகுதிக்குக்கொண்டு செல்லப்பட்டு, அங்கு குருதி நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல்.

thromboendarterectomy : குருதி உறைக்கட்டி அறுவை : தமனியிலிருந்து குருதி உறைக்கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

thromboendarteritis: தமனிச் சவ்வு வீக்கம் : தமனியில் குருதி உறைந்து தமனியின் உள்வரிச்சில் வீக்கம் ஏற்படுதல்.

thrombophlebitis : சிரைச்சவ்வு வீக்கம்; சிரை குருதி உறைவு : சிரையில் குருதி உறைவு ஏற்படடு சிரையின் சுவர் வீக்கமடைதல்.

thromboblastin : திராம்போ பிளாஸ்டின் : புரோத்ராம்பினை திராம்பினாக மாற்றும் ஒரு செரிமானப்பொருள் (என்சைம்).

thrombosis : குருதியுறைவு : குருதி நாளங்களில் குருதிகட்டுதல்.

thrombus : நாளக் குருதிக்கட்டு; குருதி உறைக்கட்டி : குழாய்நாளங்களினுள் குருதிகட்டுதல்

thrush : சளளை நோய் : குழந்தைகளுக்கு வாயிலும் கழுத்திலும் வரும் மென்புடைப்பு நோய்.

thumb : கட்டைவிரல் : கைப்பெருவிரல்.

thymectomy: கழுத்துக் கணையச் சுரப்பி அறுவை : கழுத்துக் கணையச் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்தல்.

thymocytes : நிண அணுத்திசு உயிரணு : கழுத்துக் கணையச் சுரப்பியிலுள்ள மடல் புறப்பகுதியில் இருக்கும் அடர்த்தியான நிண அணுத்திசுவில் காணப்படும் உயிரணுக்கள்.

thymol : தைமால் : நறுமணக் கறியிலைச் செடியிலிருந்து எடுக்கப்படும் நோய் நுண்மத்தடை எண்ணெய். வாய்க்ழுவு நீர்மங்களிலும், பல் மருந்துகளிலும் பெரிதும் பயன்படுகிறது.கொக்கிப் புழுவை நீக்கவும் கொடுக்கப்படுகிறது.

thymosin : தைமோசின் : கழுத்துக் கணையச் சுரப்பியின் புற அடர்ப்படல உயிரணுக்களால் சுரக்கப்படும் இயக்குநீர் (ஹார்மோன்) இது கழுத்துக்கணையச் சுரப்பியினுள் நிணநீர் வெள்ளணு உற்பத்தியைத் துண்டுகிறது.

thymus (thymus gland): கழுத்துக் கணையச் சுரப்பி: மார்பெலும்புக்குப் பின்புறம் கேடயச் சுரப்பியை மேல்நோக்கி நீண்டிருக்கும் ஒரு சுரப்பி. இது குழவிப்பருவத்திலேயே நன்கு உருவாகியிருக்கும் பருவமடையும்போது முழுவடிவளவை அடையும். பின்னர் நிணநீர்த் திசுவுக்குப்பதில் கொழுப்புத்