பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


பதிப்புரை

விளையாட்டுத்துறையில் அதிகமான நூல்களை தமிழ் உலகிற்கு தந்து புதிய துறையை உருவாக்கியவர் என்ற பெருமை டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா அவர்களுக்கு உண்டு.

ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெறவேண்டும் என்று விரும்பாத இந்தியர் இல்லை. உரிய முயற்சிகளை எடுப்பதில் யாரும் அக்கரை காட்ட வில்லை. என்பது தான் உண்மை நிலை.

இன்றும் பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களோ உடற்பயிற்சி ஆசிரயர்களோ இல்லை என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.

தொலை நோக்குத் திட்டங்களினால் மட்டுமே தங்கப்பதக்கம் கனவு நனவாகும் என்பது கண்கூடாகத் தெரியும் நிலை. இன்றைய சிறுவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நமது இளைஞர்கள் ஒலிம்பிக்பந்தயங்களில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் எடுத்த முதல் முயற்சி தான் இந்நூல். சிறியவர்களுக்கு உரிய உடற்பயிற்சிகளையும் விளையாட்டுக்களையும்