பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67

இதற்கான தத்துவங்களும் சிந்தனைகளும் வடமொழி நூல்களி லிருந்து தாராளமாக இறக்குமதி செய்யப்பட்டன. இதன் காரணமாக வடமொழிச் சொற்களும் தவிர்க்க முடியாத நிலை யில் தமிழ் இலக்கியங்களில் அதிக அளவில் இடம் பெற்றன,

இலக்கிய மொழி சமய மொழியாகியது

இவ்வாறு தமிழ் மொழியும் இலக்கியத் துறையும் காலத்தின் போக்கிற்கேற்ப நெகிழ்ந்து கொடுத்து, விடுவனவிட்டு, ஏற்பன ஏற்று பக்தி இலக்கிய மொழியாகத் தன்னை உருமாற்றிக் கொண் டது அக்காலச் சூழலுக்கேற்ப தமிழ் இலக்கியங்கள் வடமொழி தத்துவ நுட்பங்களை ஏற்றுத்தனதாக்கிக் கொண்டும், அவற்றை மக்கள் உள்ளம் ஏற்கும் வகையில் எடுத்துச் சொல்லும் பக்தி

இலக்கியங்களாக வளர்ந்து வளம் பெற்றன.

சங்க கால இறுதியில் சமணக் காப் பியமாக எழுந்த முதல் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம், அக் லத் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த சமண, பெளத்த, சைவ வைணவ சமயங் சளைப் பற்றிய தகவல்களைத் தருவதோடு, மத மாச்சரியங் களுக்கு இடமளிக்காமல், அவற்றிற்கிடையே காணவேண்டிய சமரச உணர்வை அழகாக வெளிப்படுத்தியது.

சிலப்பதிகாரத்தை அடுத்து வந்த ‘மணிமேகலை காப்பியம், ான் போற்றிய பெளத்த சமயக் கொள்கைகளை ஒளிவு மறை

வின்றி நேரடியாக விளக்கிக் கூறும் பணியைத் திறம்படச்செய் தது. அத்துடன் நில்லாது, அக்காலத்தில் நிலவிய சமயங்களுக் கிடையே இருந்த ஒருவித போட்டி மனப்போக்கை "சமயத்திற முரைத்த காதை வாயிலாக வாதப் பிரதிவாத அடிப்படையில் நடைபெற்ற பாங்கினைக்கூறி, அக்காலச் சமயச்சூழலைச் சுட்டிச் செல்கிறது. இதன் மூலம் எச்சமயக் கருத்துக்களையும் நுணுக்கமாக விளக்க வல்ல மொழியாகத் தமிழை அமைத்துள்ள தன் மூலம் அக்காலச் சமயப் போக்குக்கேற்ற மொழியாகத் தமிழ் உருமாறியிருந்ததை நேரடியாகவும் மறைமுகமாகவும் உறுதி செய்துள்ளார் சீத்தலைச் சாத்தனர்.

தத்துவ சித்தாந்த மொழியாகத் தமிழ்

சமண சமய, பெளத்த சமயத் தத்துவச் சிந்தனைகளை அற நெறி நூல்கள் மூலமும் காப்பியங்கள் வாயிலாகவும் திறம்பட எடுத்துக் கூறி வந்த தமிழ் மொழி, பக்தி இயக்க காலத்தில் சைவ சித்தாந்தங்களையும் வைணவ தத்துவங்களையும் திறம்பட விளக்க வல்ல சித்தாந்த மொழியாக, தத்துவ விளக்க மொழியாக

வளர்ந்து வளம் பெற்றது.