பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76

க்ளான இப்பனுவல்களில் இறைவனின் பெருமையும், இறை யருளின் மாட்சியும் அதை அடையப் பின்பற்றத்தக்க இஸ் லாமிய நெறியையும் கூறும் இந்நூல்களில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களே மிக அதிகமாகக் கையாளப் பட்டுள்ளன. இவ்வகையான நூல்கள் இருபதுக்குமேல் தமிழில் இயற்றப்பட்டுள்ளன.

காமா இலக்கியங்கள்

மற்றொரு இஸ்லாமிய இலக்கிய வடிவ நூல் "நாமா' என்ப தாகும். இச்சொல் பாரசீக மொழிச் சொல்லாகும். இதற்கு "வரலாறு’ என்பது பொருளாகும். g

இஸ்லாமியப் பெரியார்களின் வாழ்க்கை வரலாற் றைப் பாடல் வடிவில் விரித்துக்கூ ம் வகையில் "நாமா" நூ கள் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் வரல ைைற மட்டுமல்லாது, உலகப் படைப்பு:வரலாறுபோன்றவற்றையு இந் நூல்கள் விளககிக் கூறுகின்றன. சுமார் பதினாறு நாமா நூல்கள் தமிழில் உள்ளன. இந்நூல்கள் தொங்கல்' எனும் பாவின கதில் படைக்கப்பட்டுள்ளன.

படைப்போர் இலக்கியங்கள்

இவைகள் அல்லாது அதுவரை தமிழில் அறவே இல்லா திருந்த படைப்போர் இலக்கிய வகையைத் தமிழ் இலக்கியத்திற் கென்றே தமிழில் புதுத்துறையாகத் தோற்றுவித்தனர். ரணி இலக்கியங்கள் போரில் வெற்றிபெற்ற மன்னர்களைப் பற்றிக் கூறுவது ஆனால் படைப்போர் இலக்கியங்கள் போருக் கான காரணங்கள், சூழல், படை நடத்தும் முறை, படைவீரர் செ யும் வீரவுணர்வூட்டும் முழக்கங்கள், படைவீரர் போரிட்டமுறை, படைநடுவே நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தை, அவை முறிவுக்கான காரண காரியங்கள், இறுதியில் படையினர் பெறும் வெற்றி ஆகியவற்றைக் கதைப்போக்கில் சுவையு லும் வர்ணணையுடனும் விரித்துரைப்பனவே படைப்போர் இலக்கி யங்கள்.

படைப்போர் இலக்கியத்திலும் ஒரு புதுமையைப் புகுத்தினர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள். வெற்றிபெறும் கதாநாய . னின் பெயரில் ஒரு நூல் அமைவதே மரபு. அம் மரபுக்கு மாறுத லாக படைப்போர் இலக்கியங்கள் பலவும் எதிரியின் பெயரி லேயே அமைக்கப்பட்டுள்ளன.அதற்குக் காரணம், எக்காரணம் கொண்டும் ஒரு முஸ்லிம் முதலில் யாரையும் தாக்குவதோ