பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

78

முழுமையான இசை நூலை எழுதினார். அவ்வாறே தத்துவ ராயர் எனும் புலவர் புதுவகையான இலக்கிய வடிவங்களான பல்லிப்பாட்டு, குறிகூறும் பாட்டு, கிளிப் பயிற்றுப்பாட்டு, பாம் பாட்டு, பகடி, பந்து, பறை, இம்பில், நையாண்டி, காளம், குரவை, குணலை ஆகிய வைகள் மூலமாக தமிழ் இலக்கியத்தை மக்கள் இலக்கியமாகவே உருமாற்றி இயற்றினர்.

பள்ளுப் பாட்டுக்களும் குறவஞ்சிப் பாடல்களும் ஏற்றப் பாட்டும் வாழ்க்கைத் தட்டின் அடித்தளத்தில் உள்ள மக்களின் உணர்வுகளை, அவர்கள் அறிந்த மொழியிலே வெளிப்படுத்தும் பாவனைகளாக வெளிவந்து ஏழை, எளியவர்களின் இலக்கிய

மாக உருமாறி நிலவியது.

வளர்ந்துவந்த இலக்கிய வடிவங்கள்

இவ்வாறு சமயச்சார்பு குறைந்த சங்ககாலம் தொடங்கி சமண, பெளத்த, சைவ , வைணவ சமய இலக்கியமாகவும் சித்தர் இலக்கியமாகவும் பின்னர் மக்கள் இலக்கியமாகவும் உருமாறி

வளர்ந்தது.

காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்களை ஏற்கத் தயங்காத தமிழ் இலக்கியம், வெகு தொலைவுக்கு அப்பால் இருந்து வந்த இஸ்லாமிய, கிருத்துவசமய அரவணைப்போடும் காலப்போக்கிற் கேற்ப தன் வளர்ச்சிப் பாதையை மாற்றிக் கொண்டு செழிப்பாக வளரத் தொடங்கியது.

தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இலக்கியம் வாயலாகத் தங்கள் மார்க்கக் கருத்துக்களை, இஸ்லாமியச் சிந்தனைகள், திருமறை செய்திகளைக் கூற, மற்ற சமயத்தவர் போன்று தமிழ் இலக்கியத்தையே ஆற்றல் மிக்க கருவியாகப் பயன்படுத்த விழைந்தனர்.

இஸ்லாமியர் இலக்கியம்படைக்க முனைந்த காலகட்டத்தில் தமிழர் ஆட்சி தமிழகத்தில் இல்லாத காலம். தெலுங்கர், மராட்டி யர், கன்ன, டர்களின் , டியிலே சிக்குண்டு சிதறிக் கிடந்தகாலம். சேதுபதி போன்ற தெலுங்கு பாளையக்காரர்களின் அரவணைப் பிலே தமிழ் இளைப்பாற நேர்ந்த நேரம். ஆலயங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த வடமொழி, அரசு மொழி களான மராட்டியம், தெலுங்கோடு பரங்கி மொழிகளும் தமிழை மிரட்டிக் கொண்டிருந்த காலம் என்றுகூடச் சொல்லலாம். ஆதரிப்பாரற்ற தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கைப் போக்கும்