பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28

தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற் துண்முறை வெள்ள மூழ்கி யார்

ه ها ه ه ه از ) نام உள்ளி டாகிய இருநிலத் துாழியும்

- (பரி 2)

எனப் பரிபாடல் விவரிக்கின்றது.

நெருப்புக் கோளமாக இருந்த பூமி குளிர்ந்து, பனிப்படலத் தால் சூழப்பட்ட நிலை மாறி, நிலம் தோன்றியது பற்றிய உலக எண்ணமும், அவை நிகழப் பல ஆண்டுகள் ஆயின எனும் இன்றையக் கருத்துக்களோடு பொருந்தி வருவதைக் காணும்

போது, பழந்தமிழர் கொண்டிருந்த அறிவியல் அறிவும் உணர் வும் நம்மைத் திகைப்பில் ஆழ்த்தவே செய்கின்றன.

ஒரு படி பாலையோ, நீரையோ முக்கால்படியாக சுருக்கி அளக்கவியலாது. நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப்பொருள்களின் இச்சுருங்கா இயல்பை அறிவியல்பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் பாஸ்கல் எனும் அறிவியல் அறிஞர். நீர்ப் Quirójoir drójáist oustou (Non Compressibility of Liquids) என்பர். இவ்வுண்மையை பாஸ்கல் கண்டறிந்து கூறுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஒளவையார்,

"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது............'

எனக் கூறியுள்ளார்.

இங்கு ஆழ்கடல்', 'ஆழ அமுக்கி’ எனும் சொற்றொடர்கள் வேறொரு நுட்பமான அறிவியல உண்மையையும் தெளிவாகக் கூறுகிறது. அதாவது, ஆழத்தைப் பொருதது நீரின் அழுத்தம் அதிகமாகும். இச் சொற்றொடர்கள் மூலம் 'ஆழத்தைப் பொருத்து அழுத்தம் மிகுகின்றது என்ற அறிவியல் உண் மையை ஒளவையார் கூறுகிறார்.

உழவுத் துறையில் உரமிடுதல் ஒரு அத்தியாவசியத் தேவை யாகும். ஆனால், உரமிட்டபோது கிடைத்த பயனைவிட மிகு பயனை உரமிடாமலே பயிர் பெறமுடியும் என்கிறார் வள்ளுவர்.

நிலத்தை நன்றாக உழுது, பண்படுத்தி, புழுதிப் பரக்க வெயிலில் விட்டிருந்தால், அந்நிலம் கதிரவனிடமிருந்து சக்தி பெற்று உரத்தினும் மேலான பயனைப் பெற்றுத் தரும் என்ற அறிவியலின் அடிப்படை உண்மையை,