பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

96

ஆங்கிலத்தில் நீண்ட விளக்கங்கள் கூறிப் புரிய வைக்கும் ஒரு விஷ்யத்தை தமிழில் இரண்டேவரிகளில் சொற்செட்டோடும் அதே சமயத்தில் பொருட்செறிவோடும் கூறி, அறிவியலைப் புகட்டத் தமிழில் எளிதாக இயலும் என்பதை செயல் பூர்வமாகக் கவிதை வடிவில் நிலைநாட்டிவிடுகிறார் ஆசிரியர்.

பெளதிகவியலின் மற்றொரு அடிப்படைக் கூறான புவி யீர்ப்பு மையம்’ (Centre of Gravity) பற்றிப் பாடும்போது,

"ஒரு பொருள் அணுக்களில் நிறையெலாம் ஒன்றாய்ச்

சேர்ந்தொரு புள்ளியின் மூல

மாய்த் தாக்கி

பொருளை, பூமியை நோக்கி

இழுப்பதாய்,

எண்ணும் புள்ளியே ஒண்மைய

மாமே;

எனக் கவிதை புனைகிறார். சுருங்கக் கூறி விளங்க வைத்தல்" என்ற உத்தியைத் திறம்படக் கையாண்டு, புரிந்து கொள்ளச் சற்றுத் திறனும் அறிவியல் நுட்பக் கருத்துக்களைக் கூட சொல் லும் முறையில் சொன்னால், பல சொற்களில் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய விஷயத்தை சில சொற்கள் மூலம் சொல்லி,

எளிதாக புரிய வைக்க முடியும் என்பதை செயல் வடிவில் எண் பித்துள்ளார் ஆசிரியர்.

புவியீர்ப்பு மையம் அல்லது புவியீர்ப்பு விசை என்ற சொற் கள் அன்று நடைமுறையில் இல்லாததால் ஆசிரியரே "ஒண்

மையம்’ என்ற ஒரு கலைச் சொல்லை உருவாக்கிப் பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

எவ்வளவு நுணுக்கமான அறிவியல், தொழில்நுட்பச் செய்தி யேயாயினும் அவற்றை எளிய செய்யுட்கள் மூலம் தெளிவுபடக் கூறவியலும் என்பதை "அறிவு நூல் வழிகாட்டி' எனும் இந் நூல் மூலம் அறிந்துகொள்ள இயலுகிறது. முழுமையும் செய்யுள் வடிவிலேயே அமைந்த இவ்வறிவியல் நூலின் தலைப்புக்கேற்ப அறிவுத் துறைகளின் நுட்பம் கூறும் அறிவியல் நூல் மட்டுமல்ல, தமிழ்க் கவிதை வாயிலாக அறிவியலைச் சொல்ல முடியும் என்ப

தற்கான வழிகாட்டு நூலாகவும் இந்நூல் அமைந்துள்ள தெனலாம்.