பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60

விட்டாலும் சமஸ்கிருதத்திலிருந்த இலக்கிய, இலக்கணச் செய்தி களை மக்களிடையே பரவலாகப் பரப்புவதில் வைதிக சமயப் பெரியவர்கள் பின்னடையவில்லை.

அமைதி வேட்கை கொண்ட அனறையத் தமிழன்

வைதிக சமயத்தைத் தொடர்ந்து, வடபுலத்திலிருந்து தமிழகம் வந்த சமயங்கள் சமணமும் பெளத்தமும் ஆகும். இந்த சமயங்கள் சங்கம் மருவிய கால மக்களை வெகுவாக ஈர்த்த தற்குச் சிறப்பான காரணங்கள் உண்டு.

சங்க காலப் புலவர்கள் காதலையும் வீரத்தையுமே போற் றிப் பாடல்களை இயற்றினர் மக்களும் வீரத்திற்குப் பெருமதிப் பளித்துப் போற்றினர். போரில் வீரப் போரிட்டு மடிந்த வீரர் களைச் சிறப்பிக்கும் வகையில் நடுகல் நட்டு வணங்கிப் போற் றினர்.

வீரத்தை மிகுதியாகப் போற்றியதன் விளைவாகத் தங்கள் வீரத்தை நிலைநாட்டுவதே தங்களின் தனிப் பெரும் பண்பு என்ற உணர்வைக் கொண்டிருந்தனர். மன்னர்கள் ஒருவரோ டொருவர் போரிட்டுத் தங்கள் வீரத்தை நிலைநாட்டுவதையே பெருஞ் சிந்தனையாகக் கொண்டனர். இதன் விளைவாகத் தமிழக மூவேந்தர்களும் போரிட்டே அழியும்படியான நிலை ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட போர்களின் கொடுமையால் பெரி தும் பாதிக்கப்பட்ட மக்கள் போரை வெறுக்கும் மன நிலைக்கு ஆளாயினர். போர்புரிந்து உயிரிந்து வீரத்தை நிலைநாட்டி இவ்வுலகில் பெருமை பெறுவதைவிட அறவழி ஒழுகி, அமைதி யாக வாழ்ந்து இறையருள் பெற்று, அந்தமில் இன்பம் தரும் அந்த உலக வாழ்க்கைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள் வதில் நாட்டங் கொள்ளலாயினர். இத்தகைய சிந்தனையை ஊட்டி வளர்க்கும் போக்கில், இச் சமயங்கள் தமிழகத்திலே அழுத்தமாகக் காலூன்றத் தொடங்கின.

அகம்-புறம் விடுத்து இகம்-பரம் பேணினர்

அமைதிச் சிந்தனையும் அறவழி உணர்வும் மக்களிடையே வலுப்பெறத் தொடங்கியதுமே, சமய உணர்வுகள் வெகுவாக மக்களிடையே பரவின. அழுத்தமும் ஆதிக்கமும் பெறத் தொடங்கின.