பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டுபண்ணுகிற மருந்து. (2) உணர்வின்மை ஊட்டுகிற (3) உணர்ச்சி மயக்க மூட்டுகிற மருந்து. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்தும் உண்டு. இதனை உறுப்பெல்லை உணர்வுநீக்கி என்பர். எடுத்துக்காட்டாக, ஒரு பல்லைப்பிடுங்க வேண்டுமானால் அந்தப் பல் இருக்கும் பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ய இந்த மருந்து கொடுக்கப்படும் போது அல்லது அனைத்து உறுப்பு மயக்க மருந்து கொடுத்தால், நோயாளி மயக்கமடைந்து விடுவார்.

anaesthetist : மயக்க மருந்து கொடுப்பவர்; உணர்வகற்றி மருத்துவர்; உணர்வியல் மருத்துவர் : மயக்க மருந்து கொடுப்பதற்கு மருத்துவ முறைப்படி தகுதி பெற்றவர்.

anafranil : அனாஃப்ரானில் குளோமிப்பிராமின்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

analeptic : ஊக்க மருந்து நலமூட்டி : நலமூட்டும் மருந்து; நலிவகற்றி நலமூட்டுகிற மருந்து. காபி. தேயிலைப் பானங்களிலுள்ள 'காஃபின்' மற்றும் சோர்வகற்றி மருந்துகள் இவ் வகையைச் சேர்ந்தவை.

analgesia: நோவின்மை , உணர்ச்சியின்மை: வலியின்மை ; வலி உணர்வுக் குறைவு : புலனுணர்வினை மட்டும் இழத்தல். analgesic : நோவகற்று மருந்து: வலி நீக்கி : வலி குறைப்பான் : உணர்ச்சியின்மை உண்டு பண்ணுகிற மருந்து.

analysis : பகுப்பாய்வு : வேதியியலில் ஒரு கூட்டுப் பொருளைத் தனித்தனிப் பொருள்களாக பகுத்து ஆய்வு செய்தல். உளவியல் பகுப்பாய்வு .

anamnesis : முன் நினைவு : நோயாளியின் மறதியில் ஆழ்ந்துவிட்ட பழைய செய்திகளின் மறு நினைவு

anaphrodisiac : பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து; பாலுணர்வுக் குறைப்பி : பாலுணர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கு உதவுகிற மருந்து. anaphylaxis அயற்பொருள் தாங்கா அதிர்ச்சி : அதி ஒவ்வாமை வெளியிலுள்ள புரதம் அல்லது வேறு பொருள் ஊசிமூலம் செலுத்தப்படும் பொழுது அதன் எதிர்ப்பொருள் உடலில் முன்னரே இருப்பதால் ஏற்படும் தாக்கம் அதிர்ச்சி. anaplasia : தனிப் பண்பிழந்து பல்கும் வளர்ச்சி: பிரித்துணர் விழப்பு: பிறழ்வளர்ச்சி : ஓர் உயிரணு தனது தனிப்பண்புகளை இழத்தல். புற்று நோயில் ஏற்படுவது போல் பரவல் நடவடிக்கையுடன் இது தொடர்புடையது.

anaplasty : உயிர்க்கூறு ஓட்டுமுறை : அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறுகாயங்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை.

anarthria : பேச்சின்மை பேச்சிழப்பு : ஒருவர் வாய்பேச முடியாதிருக்கும் ஒரு நிலை.

anasarca : தோலடி நீர்க்கோவை : முழு மெய் வீக்கம், உடல் வீக்கம்: நீர்க்கோவை : புறத்தோலின் அடித்திசுக்களிலும், நிணநீர்க்குழிகளிலும் ஊனீர் ஊடுருவித் தேங்கியிருத்தல். இது பொதுவாக இழைம அழற்சி அல்லது இழைமங்களின் நீர்க்கோவை எனப்படும்.

anastomosis : குருதி நாளப் பின்னல் ; பிணைப்பு: நாளப்பிணைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு