பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தில் அளவுக்கு மீறியுள்ள அமிலப் பொருளை (காடிப் பொருள்) மதிப்பிடுவதற்கான சோதனை.

asymmetry : சமச்சீரின்மை ; சீர்மையின்மை; ஒத்திசைவற்ற : உடலின் இருபுறமும் உள்ள உறுப்புகள் சமச்சீர் இல்லாமல் இருத்தல்.

asymptomatic : நோய்க் குறியின்மை; குறியிலா : நோய்க் குறிகள் புலனாகாமல் இருத்தல்.

ataratic : மனநோய் தீர்க்கும் மருந்து; உள அமைதியூக்கி; சாந்த மூட்டி : உணர்வை மழுங்கச் செய்யாமல் மனச்சீர்குலைவைத் தணிக்கும் மருந்துகள்.

atarax : அட்டாரக்ஸ் : ஹைட்ராக்சிசைன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

atavism : முதுமரபு மீட்சி; மூதா தையம்; முதுமரபு மீட்சி : மூதாதையரின் நோய் சில தலைமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் வருதல்.

ataxia, ataxy : உறுப்பு ஒத்தியங்காமை; தள்ளாட்டம்; தள்ளாடல்; நிலை சாய்வு : தசைக் கட்டுப்பாடு குறைபாடு காரணமாக உடலுறுப்புகள் ஒத்தியங்க இயலாதிருத்தல் உறுப்புகள் வெட்டியிழுப்பதும், தள்ளாடுவதும் இதனால் உண்டாகின்றன.

atebrin : ஆட்டெப்ரின் : 'மெப்பாக்ரின்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்

atheroma : தமனித் தடிப்பு : தமனி வீக்கம். இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங்களாகிய தமனிகளின் நெருங்கிய படலங்களில் கடினமான மஞ்சள் நிறப் படலங்கள் படிந்திருத்தல் இரத்தத்தில் மிகப் பெருமளவில் கொழுப்புப் பொருள் (கொலஸ் டிரால்) அடங்கியிருப்பது அல்லது சர்க்கரையை அளவுக்கு அதிகமாக நுகர்தல் இதற்குக் காரணமாக இருக்கலாம். நெஞ்சுப்பையைச் சுற்றிய தமனிகளில் இது படிந்திருந்தால் நெஞ்சுப்பைக் குருதி நாளங்களில் இரத்தம் உறைதல் ஏற்படும்.

atherosclerosis : தமனித் தடிப்பு இறுக்கம்; பெருந் தமனித் தடிப்பு : தமனிகள் தடித்தும் குறுக்கமாகவும் இருத்தல்.

athetosis : உறுப்பு நடுக்கம்; சுழல் வாதம் : மூளையில் நைவுப்புண் ஏற்படுவன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி அசைந்து (நடுங்கி) கொண்டிருத்தல்.

athlete's foot : பாதத் தடிப்பு நோய்; பாதப்படை : ஒருவகைப் பூஞ்சணத்தினால் விளையாட்டு வீரர்களின் பாதத் தோலில் முரட்டுத்தனமும் எரிச்சலும் உண்டாக்கும் நோய்.

atlas bone : கழுத்தெலும்பு : மண்டையோட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு.

ativan : ஆட்டிவன் : 'லோராஸ்பாம்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

atom : அணு : ஒரு தனிமத்தின் மிகமிகச் சிறிய கூறு அல்லது துகள். இது தனித்தியங்கக் கூடியது. ஒரே தனிமத்தின் அல்லது இன்னொரு தனிமத்தின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களுடன் ஒருங்கிணைந்து இயங்கவும் வல்லது. அணு எடை என்பது. ஹைட்ரஜனின் ஓர் அணுவின் எடையுடன் ஒப்பிடும் போது ஓர் அணுவின் எடையாகும்

atomization : அணுவாக்குதல் ; நுண்திவலையாக்கம் : நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.

atomizer : அணுவாக்கக் கருவி; தெளிப்பான் : நீரமங்களை நுண் திவலைகளாக்கும் கருவி.