பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

180

தாயினும மின்னணு அறிவியல் வளர்ச்சியால் முன்னணியில் நிற்கும் ஜப்பான் மொழி, மற்றும் மேனாட்டு மொழிகள் பலவும் முற்பட்டு வருகின்றன.

தமிழைப் பொருத்தவரை ஒலிக்குறைவை நிறைவு செய்வதற் கென புதிய வரிவடிவங்களை உருவாக்க வேண்டிய அவசியம் எதுவும் எழவில்லை இன்னும் சொல்லப்போனால் பயன் குறைந்த வரிவடிவங்களை விடுத்து பயன்மிகு எழுத்துருக்களைப் பயன்படுத்த முற்படுவதே அறிவுடைமையாகும்.

தமிழ் ஒலிப்பில் சிக்கலேற்படுத்தும் ஆங்கில எழுத்துகள்

ஆங்கில மொழி வழியே அறிவியல் மொழிபெயர்ப்பும் ஒலி பெயர்ப்பும் செய்ய வேண்டியதாயுள்ளது. ஆங்கிலத்திலுள்ள இருபத்தியாறு எழுத்துகளில் ஒலிபெயர்ப்பின்போது நமக்குச் சிக்கலேற்படுத்தும் எழுத்துகளாக அமைந்திருப்பவை ஹெச் (H), ஜே (), எஃப் (F), இலட் (Z) ஆகிய எழுத்துகள் ஆகும். மற்றும் சி, ஜி (C,G), டி. ட்டி (D.T), பி, ப்பி (B,P) ஆகிய எழுத்துகளிடையே வேறுபாட்டைக் காட்டும் வகையில் ஒலி பெயர்ப்புச் செய்ய வேண்டிய அவசியமேற்படுகிறது.

வர்க்க எழுத்துகளும் தமிழும்

இதே போன்ற 'ச' கார, க” கார வர்க்க எழுத்துகள் சமஸ் கிருதம் போன்ற இந்திய மொழிகள் பலவற்றிலும் அமைந் துள்ளன. அவற்றின் உச்சரிப்பையும் சிதைவின்றி தமிழில் ஒலி பெயர்க்க வேண்டியதாகிறது. இவ்வகையில் நமக்கு உதவும் பொருட்டு பன்னெடுங்காலமாகத் தமிழில் பயன்பட்டு வருவன "கிரந்த எழுத்துகளாகும். கிரந்த எழுத்துகளான ஸ், ஷ, ஜ, ஹ, நீ ஆகிய ஆறு எழுத்துகளும் கிரந்த தமிழ் எழுத்துகள்’ என்ற பெயராலேயே நீண்டகாலமாக அழைக்கப்பட்டும் தமிழில் பயன்படுத்தப்பட்டும் வருவது கண்கூடு.

இலக்கியம் ஏற்காத சமயம் சார்ந்த கிரந்த எழுத்துகள்

வைதீக சமய உணர்வுகளையும் சமஸ்கிருத மொழியிலுள்ள தத்துவச் சிந்தனைகளையும் கருத்துச் சிதைவின்றித் தமிழர்க்கு உணர்த்த வழி வகுக்கும் வகையிலேயே நீண்ட காலத்திற்கு முன்பு இக் கிரந்த எழுத்துகள் தமிழில் உருவாக்கப்பட்டன. சமயச் சார்பாளர்களால் இக் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்து களோடு கலந்து பயன்படுத்தப்பட்டதே தவிர இலக்கியப் புலவர்