பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

184

பெயர்பபாளனின் தனித்திறன்

சிறுவர்க்கான அறிவியல் மொழிபெயர்ப்பைப் பொருத்த வரை மூலத்துக்கு உண்மையாசு மட்டுமிருந்தால் போதாது. மொழிபெயர்ப்பு சுவையாகவும் அமைதல் வேண்டும். அதிக மாற்ற, திருத்தங்களுக்கு உட்படுத்தப்படாமலே மொழிபெயர்ப் பில் சுவையூட்டிச் சொல்வதிலேதான் பெயர்ப்பாளன் திறமையே அடங்கியுள்ளது. இதற்கு மொழிபெயர்ப்பாளன் மூல நூற் பொருளிலே மட்டுமின்றி, இலக்கணப் புலமையும் சுவையாக சொற்றொடர்களை உருவாக்கவல்ல சொல்லாட்சித் திறனும் பெற்றவராக இருத்தல் அவசியம். மேலும், பேச்சு வழக்குத் தமிழையும் இலக்கியச் சுவையோடு எழுதும் ஆற்றலும் வாய்க்கப் பெற்றவராயிருத்தல் அவசியம்.

சுதந்திரப் பறவையும் கூண்டுப் பறவையும்

சிறுவர்க்கான அறிவியல் புனைகதைகளையோ அன்றி தொழில் நுட்ப நூல்களையோ பெயர்க்கும்போது, பெயர்ப் பாளனுக்குச் சில புதிய சிந்தனையோ, கற்பனையோ அல்லது மூலத்துக்கு மேலும் மெருகூட்டும் உணர்வோ தோன்றலாம். அத்தருணங்களில் மூல நூலாசிரியர் சொல்லாத எதையும் சு ை கருதி சேர்க்க முயல்தல் கூடாது. சுருங்கச் சொல்லுமிடத்து மூல ஆசிரியன் தன் நூலில் எதை வேண்டுமானாலும் கூறலாம். அந்த உரிமை நூலாசிரியனுக்கு உண்டு. மூல நூலாசிரியன் ஒரு சுதந்திரப் பறவை. ஆனால், மொழிபெயர்ப்பாளன் கட்டுக் காவலுக்குட்பட்ட ஒரு கூண்டுப் பறவை. வரையறைக்குட்பட்ட சுதந்திரமே பெயர்ப்பாளனுக்குரியது. அதைக் கருத்தில் அழுத்த மாக இருத்திக் கொண்டே மொழிபெயர்ப்புப் பணியைச் செய்ய முற்படுதல் வேண்டும்.

உரைநடையினும் கவிதை கடினம்

உரைநடையில் மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் கவிதை யுருவில் பெயர்ப்பது கடினமான பணியாகும். அதிலும் சிறுவர் அறிவியல் இலக்கியம் என்றாலே நடை எளிமை பொருள் தெளி வோடு சொற்சுவையும் உடையதாக இருக்க வேண்டுமெனக் கூற வேண்டியதில்லை. ஓசை இன்பமே சிறுவர்களைப் படிக்கத் தூண்டி, பொருளறிவோடு ஒன்றச் செய்யும் சக்திமிக்க சாதன மாகும். எனவே, சிறுவர் அறிவியல் இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்க்கும்போது, அதனை மொழியாக்கமாகவோ அன்றி தழுவல் பெயர்ப்பாகவோ செய்வதே சாலச் சிறந்ததாக அமையும்.