பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

188

துக்குப் பகரமாக ஒரு தொகையைப் பெறலாம். இதனையும் சட்டம் 'Damages என்றே குறிக்கிறது. இதனைத் தமிழில் அவதூறு எனும் அவமானத்தால் ஏற்பட்ட தீங்குக்கு ஈடாகப் பெறுதல்' எனும் பொருளில் தீங்கிடு' என மொழிவது எலலாற் நானும் பொருத்தமுடைத்தாகும்.

முதலாவதில் ஒப்பந்த மீறலால் ஏற்பட்ட பொருள் இழப் புக்கு ஈடுபெறும்போது இழப்பீடு ஆகிறது. இரண்டாவதில் அவதூறினால் ஏற்பட்ட அவமானம் எனும் தீங்குக்கு ஈடுபெறு வதால் ‘தீங்கீடு எனக் குறிக்கப்படுகிறது. சட்ட த்தில் இரண்டு இடங்களிலும் ஒரே சொல் இடம்பெற்றாலும் கருத்துணர் ததும் தன்மைக்கேற்ப வெவ்வேறு பொருளைக் கொண்டதாகத் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகிறது. இதன் மூலம் மூலத்தைவிட மொழி பெயர்ப்பு மேலும் தெளிவையும் திட்பத்தையும் பெறுவ ைதக் காணலாம்.

சில சமயம் மூல மொழிச் சொல்லிலிருந்து சட்டக் தைப் பெயர்க்கும்போது அதனினும் தெளிவான சொல், .ெ பர்ப்பு மொழியில் அமைவதுண்டு. சான்றாக Right என்ற சட்டச் சொல்லுக்கு அகராதியில் உரிமை, நேர்மையான, சரியான, வலது என்ற பல பொருட்கள் காணப்படும். ஆனால். தமிழைப் பொருத்தவரை உரிமை' என்ற தமிழ்ச் சொல் குழப்பமற்ற தாக வும் வேறு பொருள் உணர்த்தாததாகவும் அமைந்து Right’ என்ற ஆங்கிலப் பொருள் நுட்பத்தையே குறிப்பதாக அமைந் துள்ளது.

இதுவரை அறிவியல், சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மொழிபெயர்ப்புச் சிறப்புத் தன்மைகளை ஆய்ந்தோம். இனி, மொழிபெயர்ப்பின் பொதுப் பண்புகள் சிலவற்றைக் காண்போம்.

நான்கு வகை மொழிக் குணங்கள்

எந்தத் துறை நூலை மொழிபெயர்க்க விளைகிறோமோ அந்தத் துறையில் ஆழ்ந்த பொருளறிவும் மூல மொழியிலும் பெயர்ப்பு மொழியிலும் நல்ல புலமையும் கொண்டிருத்தலோடு இரு மொழிகளிலும் இலக்கண அறிவும் மரபும் நன்கு தெரிந் திருக்க வேண்டும்.

ஏனெனில், எந்த மொழிச் சொல்லுக்கும் நான்கு வகையான குணங்கள் இருப்பதாக மொழியியலார் மொழிவர். நாம் கண் ணால் காணும் வரிவடிவம், அச் சொல்லை உச்சரிக்கும்போது நாம் கேட்கும் ஒலி வடிவம், செவி வழிச் செல்லும் சொல்லின் ஒலி