பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

176

பேசும் தமிழ் மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர். இவர்கள் பேசிய வேற்று மொழிச் சொற்கள் தமிழில் கலந்து வழங்குவது தவிர்க்கவியலாததாகியது.

சங்க காலம் முதலே சமய மொழிகளின் தாக்கம்

வடபுலத்திலிருந்து தமிழகம் நோக்கி வந்து நிலை கொண்ட வைதீக சமய மொழியான சமஸ்கிருதமும் அதனைத் தொடர்ந்து வந்த சமண, பெளத்த சமய மொழிகளான பாலி, பிராக்ருதம், பிராமி போன்ற வடபுல மொழிகளும் தமிழ் மக்களிடைய செல் வாக்குப் பெற முனைந்தன. சங்க காலத்தில் இம்மொழிகளின் சொற்கள் சமயச் சார்புடன் தமிழொடு உறவும் நெருக்கமும் கொள்வது தவிர்க்கவொண்ணா ஒன்றாகியது. இந்நிலையில் வடபுல மொழிகளின் சொற்கள் வரையறையின்றித் தமிழில் கலப்பதால் தமிழின் ஒலிப்பண்பும் தனித்தன்மையும் பல திப்புக் குள்ளாகும் எனக் கருதியே தொல்காப்பியர் பிறமொழிச் சொற் களின் ஒலிப்புமுறை தமிழில் எவ்வாறு அமைய வேண்டும் என் பதற்கு இலக்கணம் வகுத்துக் கூறலானார்.

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாக்கும்மே” 40

1

தமிழ் மொழியில் வந்து கலக்கும் வடசொல், தமிழ் எழுத்து களின் ஒசைக்கிணங்க தன் ஒலிப்பு முறையை மாற்றியே இடம் பெறுதல் வேண்டும். இங்கு வடசொற்கள் எனக் குறிப்பிடப்பட் டிருந்தாலும் அஃது தமிழல்லாத பிற மொழிகள் அனைத்தையும் குறிப்பனவாம். காலப் போக்கில் அரபி, பெர்சியன், ஆங்கிலம், ஃபிரெஞ்சு. டச்சு போன்ற அயல்நாட்டு மொழிச் சொற்களும் உருது முதலான இந்திய மொழிச் சொற்களும் தமிழில் கலந்து உறவாடின.

ஒலி பெயர்ப்புக்கான தொல்காப்பிய இலக்கண முறையே பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பெரிதும் பின்பற்றப்பட்டு வந்தது.

உலக மொழிகளின் ஒலிப்பிலக்கண முறை

இத்தகு ஒலிப்பிலக்கண முறை, தமிழில் மட்டுமல்ல, வேறு பல உலக மொழிகளிலும் வழங்கி வந்துள்ளது என்பது மொழி வரலாறு தரும் உண்மையாகும். இவ்வொலிப்பு முறை இன்றும் கூட பல்வேறு உலக மொழிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. சான்றாக, ஏசுநாதரைக் குறிக்கும் 'கிரைஸ்ட்" என்ற ஆங்கிலப்