பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேற்பட்ட தமனிகள் அல்லது சிரைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருத்தல்.

அறுவை மருத்துவத்தில் உட்புழையுள்ள இரண்டு உறுப்புகள் குழாய்கள் அல்லது நரம்புகள் பின்னி ஒன்றுபட்டிருத்தல்.

anatomical position உடற் கூற்றியியலான; உடல் உட்கூற்று அமைப்பு நிலை ' உடலின் உள் உறுப்புகளின் முன்புறத் தோற்றத்தைப் பார்க்கும் வகையில் உடல் முன்னோக்கியவாறு நேராக நிற்கும் தோற்றத்தில் அமைந்திருக்கும். இதில் கைகள் உடலில் பக்கவாட்டில் உள்ளங்கைகள் முன்னோக்கியவாறு அமைத்திருக்கும். முதுகுப்புறம் நேராக உள்ள நிலையில் பின்புறத்தோற்றம் அமைந்திருக்கும்.

anatomy: உடல் உட்கூறியல் உள்ளுறுப்புகளான எலும்புகள் போன்ற உள்ளுறுப்புகளின் அமைப்பினை பிளந்து பார்த்து ஆராயும் துறை.

anchylose : மூட்டு விறைப்பு: எறும்பு மூட்டுகள் விறைத்துப் போதல்.

anchylosis : மூட்டு விறைப்பு நோய் : மூட்டுக்கள விறைத்துப் போகும் நோய்; கணுக்கள் திமிர் கொள்ளுதல். anchylostomiasis கொக்கிப் புழு நோய் : கொக்கிப்புழு போன்ற புழுவால் ஏற்படும் குருதிச்சோர்வு நோய்.

ancoloxin . ஆங்கோலாக்சின் : புண் ஏற்பட்ட இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துகளில் (எதிர் விழுப்புப் பொருள்) ஒன்று.

ancrod : குருதிக் கட்டுத் தடைப் பொருள் (ஆங்க்ரோட்) : மலேயாக் குழிவிரியன பாம்பின் நஞ்சிலிருந்து எடுக்கப்படும் குருதி உறைவதைத் தடுக்கும் பொருள் இது கட்டியாக உறையக்கூடியக் கசிவு ஊனீரை அழித்து இரத்தத்தில் இந்தக்கசிவு ஊனீர் (ஃபிப்ரின்) உருவாவதற்கான முக்கிய காரணியைக் குறைத்து விடுகிறது. இது ஓர் அயல்புரதமாகையால், இது உடலில் நோய் எதிர்ப்புப் பொருள் உண்டாகத் தூண்டுகிறது இதனால் சில வாரங்களில் நோயாளியிடம் இதன் வினைக்குத் தடை உண்டாகிறது. எனவே இதனை குறுகிய விளைவுக்கே பயன்படுத்தப்படுகிறது.

ancylostoma : குடற்புழு : சிறு குடல் முகப்பில் மொய்த்திடும் புழுக்கள். இவை மலத்துடன் வெளியே வந்து. ஈர மண்ணில் முட்டையிட்டு, கொக்கிப்புழுக்கள் உருவாகின்றன. இக்கொக்கிப்புழுக்கள் பாதங்கள் வழியாக உடலுக்குள் சென்று நோய் உண்டாக்குகின்றன. காலணிகளை அணிவதன் மூலமும், கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இப் புழுக்கள் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம்.

ancylostomiasis : குடற்புழு நோய்: மனிதரின் குடலில் கொக்கிப் புழுக்கள் மொய்த்து உண்டாகும் நோய். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடும், கடுமையான இரத்த சோகையும் ஏற்படும்.

androblastoma : ஆண்மையாக்க நோய். பெண் கருப்பையில் ஏற்படும் ஒருவகைக் கட்டி. இது ஆண் பால் அல்லது பெண்பால இயக்கு நீர்களை (ஹார்மோன்) உற்பத்தி செய்து, பெண்களிடம் ஆண்தன்மையினையும், சிறுமியரிடம் பருவத்திற்கு முந்தியே பூக்கிற தன்மையையும் உண்டாக்குகின்றன.

androcur . ஆண்ட்ரோக்குர் : 'சைப்ரோட்டெரான்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.